சனிக்கிழமை 23 பிப்ரவரி 2019

ஓஎன்ஜிசி: பங்குகளை திரும்பப் பெறும் திட்டம் ஜன. 29-இல் தொடக்கம்

DIN | Published: 22nd January 2019 12:43 AM


பொதுத் துறையைச் சேர்ந்த ஓஎன்ஜிசி நிறுவனத்தின் பங்குகளை திரும்பப் பெறும் திட்டம் ஜனவரி 29-ஆம் தேதி தொடங்க உள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் முதலீட்டாளர்களுக்கு திங்கள்கிழமை வழங்கிய கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது:
ஒரு பங்கின் விலை ரூ.159 என்ற அடிப்படையில் 25.29 கோடி பங்குகளை திரும்பப் பெறும் திட்டத்துக்கு ஓஎன்ஜிசி-யின் இயக்குநர்கள் குழு கடந்தாண்டு டிசம்பர் 20-ஆம் தேதி ஒப்புதல் அளித்தது. 
அதிக ரொக்க கையிருப்பை கொண்ட பொதுத் துறை நிறுவனங்கள் பங்குகளை திரும்பப் பெறும் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்ற மத்திய அரசின் வலியுறுத்தலுக்கு ஏற்ப ஓஎன்ஜிசி இந்த நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளது.
அதன்படி, வரும் ஜனவரி 29-ஆம் தேதி தொடங்கவுள்ள பங்குகளை திரும்பப் பெறும் திட்டம் பிப்ரவரி 11-ஆம் தேதியுடன் முடிவடையும் என்று ஓஎன்ஜிசி தெரிவித்துள்ளது.
ஓஎன்ஜிசி நிறுவனத்தில் மத்திய அரசுக்கு 65.54 சதவீத பங்கு மூலதனம் உள்ளது. 
எனவே, இந்த திட்டத்தின் மூலம் மத்திய அரசுக்கு ரூ.2,640 கோடி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

More from the section

ஃபோர்டு இந்தியாவின் புதிய எண்டவர் கார் அறிமுகம்
இந்தியாவில் ஹெலிகாப்டர்களுக்கான தேவை சூடுபிடிக்கும்: ஏர்பஸ்
தன்னிச்சையான கடன் மேலாண்மை அலுவலகத்தை அமைப்பதற்கான நேரமிது : நீதி ஆயோக்
ரூ.2,951 கோடி இடைக்கால ஈவுத்தொகையை வழங்கியது என்டிபிசி
ஏற்ற இறக்கத்தில் பங்குச் சந்தை