சனிக்கிழமை 23 பிப்ரவரி 2019

சென்செக்ஸ் 192 புள்ளிகள் உயர்வு

DIN | Published: 22nd January 2019 12:44 AM


இந்தியப் பங்குச் சந்தைகள் தொடர்ந்து ஐந்தாவது வர்த்தக நாளாக திங்கள்கிழமையன்றும் சூடுபிடித்து காணப்பட்டது. இதையடுத்து, சென்செக்ஸ் 192 புள்ளிகள் அதிகரித்தது.
அமெரிக்கா சீனா இடையிலான வர்த்தக உறவு குறித்த பேச்சுவார்த்தையில் நல்ல பலன் கிடைக்கும் என்ற நம்பிக்கை முதலீட்டாளர்களிடையே காணப்பட்டது. நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகளும் சந்தை எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதத்தில் இருந்தன. இதுபோன்ற காரணங்களால், பங்குச் சந்தைகளில் வர்த்தகம் விறுவிறுப்புடன் காணப்பட்டது.
நிதி நிலை முடிவுகள் சிறப்பாக இருந்ததன் எதிரொலியாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகளின் விலை 4.36 சதவீதம் அதிகரித்தது. கோட்டக் மஹிந்திரா வங்கி பங்குகளின் விலை 2.42 சதவீதமும், பஜாஜ் பைனான்ஸ் 1.89 சதவீதமும், இன்ஃபோசிஸ் பங்குளின் விலை 1.61 சதவீதமும் உயர்ந்தன.
அதேசமயம், ஹீரோ மோட்டோகார்ப், யெஸ் வங்கி, மாருதி சுஸுகி, பவர் கிரிட் பங்குகளின் விலை 3.40 சதவீதம் வரை சரிந்தன.
மும்பை பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 192 புள்ளிகள் அதிகரித்து 36,578 புள்ளிகளில் நிலைத்தது. தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 54 புள்ளிகள் உயர்ந்து 10,961 புள்ளிகளில் நிலைத்தது.
 

More from the section

ஃபோர்டு இந்தியாவின் புதிய எண்டவர் கார் அறிமுகம்
இந்தியாவில் ஹெலிகாப்டர்களுக்கான தேவை சூடுபிடிக்கும்: ஏர்பஸ்
தன்னிச்சையான கடன் மேலாண்மை அலுவலகத்தை அமைப்பதற்கான நேரமிது : நீதி ஆயோக்
ரூ.2,951 கோடி இடைக்கால ஈவுத்தொகையை வழங்கியது என்டிபிசி
ஏற்ற இறக்கத்தில் பங்குச் சந்தை