சனிக்கிழமை 20 ஜூலை 2019

6 மாதங்களில் ஒரேயொரு நானோ கார் விற்பனை

DIN | Published: 03rd July 2019 12:53 AM


கடந்த 6 மாதங்களில் ஒரேயொரு நானோ கார் மட்டுமே விற்பனையாகி உள்ளதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் செபியிடம் கூறியுள்ளதாவது:
நடப்பாண்டு ஜனவரி மாதத்திலிருந்து நானோ கார் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஜனவரி-ஜூன் வரையிலான ஆறு மாத கால அளவில் பார்க்கும்போது பிப்ரவரியில் மட்டுமே ஒரேயொரு நானோ கார் விற்பனையாகியுள்ளது.
டாடா மோட்டார்ஸுக்கு சொந்தமான குஜராத் சனந்த் ஆலையில் கடந்த 2018 டிசம்பரில் நானோ கார் இறுதியாக உற்பத்தி செய்யப்பட்டது. அப்போது, 82 கார்கள் தயாரிக்கப்பட்டன. தேவைக்கு ஏற்ப நானோ கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால், ஜனவரி--ஜூன் காலத்தில் நானோ கார் எதுவும் ஏற்றுமதி செய்யப்படவில்லை என செபியிடம் டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.
 

More from the section

ஏர்டெல்லை பின்னுக்குத் தள்ளி  ரிலையன்ஸ் ஜியோ 2-ஆம் இடம்
அதிக டிஜிட்டல் மயமாக்கப்பட்ட மாநிலங்கள்:  தமிழகத்துக்கு 4-ஆம் இடம்
கரூர் வைஸ்யா வங்கி மொத்த வணிகம் ரூ.1.10 லட்சம் கோடி
பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சி
ஏர்டெல்லை பின்னுக்குத்தள்ளி 2-ஆம் இடம்பிடித்தது ஜியோ!