சனிக்கிழமை 20 ஜூலை 2019

ஸ்கேனியா நிறுவனத்தின் புதிய வகை டிரக் அறிமுகம்

DIN | Published: 05th July 2019 01:01 AM
புதிய டிரக்கை அறிமுகப்படுத்தும் ஸ்கேனியா இந்தியாவின் நிர்வாக இயக்குநர் பீட்டர் நோவோட்னி.


ஸ்கேனியா இந்தியா நிறுவனம் அடுத்த தலைமுறைக்கான புதிய வகை டிரக்கை வியாழக்கிழமை அறிமுகப்படுத்தியது.
இதுகுறித்து ஸ்கேனியா இந்தியாவின் நிர்வாக இயக்குநர் பீட்டர் நோவோட்னி கூறியுள்ளதாவது:
இந்தியா எங்களுக்கு மிக முக்கியமான சந்தை. அதன் காரணமாக, உலகத் தரம் வாய்ந்த வர்த்தக வாகனங்களை இங்கு அறிமுகப்படுத்துவதில் நிறுவனம் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டு வருகிறது.
அந்த வகையில், தற்போது அடுத்த தலைமுறைக்கான பிஎஸ்-6 சுற்றுச்சூழல் விதிமுறைகளுக்கு உகந்த டிரக்கை நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. சுரங்கம், கட்டுமானம், நீண்ட தூர வர்த்தக நடவடிக்கைகளுக்கு இந்த வாகனம் ஒரு வரப்பிரசாதமாகும்.
வாடிக்கையாளர்கள், பாதுகாப்பு, செயல்திறன், உற்பத்தித் திறன், அதிக லாபம் ஆகியவற்றை அடைய எங்களின் தயாரிப்பு மிகவும் உதவிகரமாக இருக்கும்.
இப்புதிய டிரக் அறிமுகம்,  இந்தியாவில் நிறுவனத்தின் செயல்பாட்டை மேலும்  வலுப்படுத்துவதுடன், சுரங்க தொழில்துறை வளர்ச்சிக்கும் பேராதரவைத் தரும் என்றார் அவர்.
லார்சன் அண்டு டூப்ரோ நிறுவனத்துடன் இணைந்து ஸ்கேனியா நிறுவனம் இந்தியாவில் தனது செயல்பாட்டை கடந்த 2007-ஆம் ஆண்டு துவக்கியது. கர்நாடக மாநிலம் நரசபுராவில் உற்பத்தி ஆலையை அமைத்த இந்நிறுவனம், சந்தையில் தேவைக்கு ஏற்ப வாகனங்களை தயாரித்து வருகிறது.

 

More from the section

ரூ.27 ஆயிரத்தை நெருங்குகிறது தங்கம்
ஏர்டெல்லை பின்னுக்குத் தள்ளி  ரிலையன்ஸ் ஜியோ 2-ஆம் இடம்
அதிக டிஜிட்டல் மயமாக்கப்பட்ட மாநிலங்கள்:  தமிழகத்துக்கு 4-ஆம் இடம்
கரூர் வைஸ்யா வங்கி மொத்த வணிகம் ரூ.1.10 லட்சம் கோடி
பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சி