சனிக்கிழமை 20 ஜூலை 2019

இந்தியாவின் உருக்குப் பொருள்கள் இறக்குமதி 78.30 லட்சம் டன்: பிரதான்

DIN | Published: 09th July 2019 01:01 AM


கடந்த நிதியாண்டில் வர்த்தகத்துக்கு தயாரான உருக்குப் பொருள்களின் இறக்குமதி 78.30 லட்சம் டன்னாக இருந்தது என்று  நாடாளுமன்றத்தில் மத்திய உருக்குத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார். 
இதுகுறித்து தர்மேந்திர பிரதான் கூறியதாவது:
வர்த்தகத்துக்கு தயார் நிலையில் உள்ள உருக்குப் பொருள்களின் இறக்குமதி 2017-18 நிதியாண்டில் 74.80 லட்சம் டன்னாக காணப்பட்டது. இந்த நிலையில், கடந்த 2018-19 நிதியாண்டில் அவற்றின் இறக்குமதி 4.7 சதவீதம் அதிகரித்து 78.30 லட்சம் டன்னை எட்டியுள்ளது.
குறிப்பாக, துருப்பிடிக்காத உருக்கு,  குளிரூட்டப்பட்ட மற்றும் சூடான உருக்குத் தகடுகள், எலக்ட்ரிக்கல் ஷீட் உள்ளிட்ட பொருள்கள் வெளிநாடுகளிலிருந்து அதிக அளவில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன என்றார் அவர்.
 

More from the section

ஏர்டெல்லை பின்னுக்குத் தள்ளி  ரிலையன்ஸ் ஜியோ 2-ஆம் இடம்
அதிக டிஜிட்டல் மயமாக்கப்பட்ட மாநிலங்கள்:  தமிழகத்துக்கு 4-ஆம் இடம்
கரூர் வைஸ்யா வங்கி மொத்த வணிகம் ரூ.1.10 லட்சம் கோடி
பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சி
ஏர்டெல்லை பின்னுக்குத்தள்ளி 2-ஆம் இடம்பிடித்தது ஜியோ!