சனிக்கிழமை 20 ஜூலை 2019

பொதுத் துறை வங்கிகளுக்கு ரூ.70,000 கோடி மூலதனம் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும்: எஸ்&பி

DIN | Published: 09th July 2019 01:01 AM

பொதுத் துறை வங்கிகளுக்கு ரூ.70,000 கோடி மூலதனம் வழங்கப்படும் என மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் என சர்வதேச தரக்குறியீட்டு நிறுவனமான ஸ்டாண்டர்ட் அண்டு பூர்ஸ் (எஸ்&பி) தெரிவித்துள்ளது. 
இதுகுறித்து அந்த நிறுவனம் மேலும் கூறியுள்ளதாவது:
மத்திய அரசு, பொதுத் துறை வங்கிகளுக்கு ரூ.70,000 கோடி மூலதனத்தை வழங்க முன்வந்திருப்பது அதன் கடன் நடவடிக்கைகளில் சாதகமான விளைவுகளை ஏற்படுத்தும். மேலும், இந்த தொகை பலவீனமான நிலையில் உள்ள நிறுவனங்களின் வாராக் கடன்களை சீரமைக்கவும்,  வங்கிகளின் மூலதன இருப்பு விகிதத்தை  போதுமான அளவிற்கு அதிகரித்துக் கொள்ளவும் உதவும்.
இவற்றின் மூலம், பொதுத் துறை வங்கிகளின் கடன் வழங்கல் நடவடிக்கைகள் வேகமெடுக்கும் என்பதுடன், அது நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் என எஸ்&பி தெரிவித்துள்ளது.
வங்கிகளுக்கு ரூ.3.15 லட்சம் கோடி மூலதனம்: பொதுத் துû வங்கிகளுக்கு கடந்த 11 ஆண்டுகளில் மட்டும் ரூ.3.15 லட்சம் கோடி அளவுக்கு மூலதனம் வழங்கப்பட்டுள்ளதாக மக்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய நிதி இணை அமைச்சர் அனுராக் தாக்குர் திங்கள்கிழமை கூறியதாவது:
கடந்த 2008-09 முதல் 2018-19 நிதியாண்டு வரையிலான காலத்தில் பொதுத் துறை வங்கிகளுக்கு ரூ.3.15 லட்சம் கோடி அளவிலான மூலதனம் வழங்கப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கி விதிமுறைகளின்படி, இந்தியாவில் செயல்படும் வங்கிகளின் குறைந்தபட்ச மூலதன இடர்பாடு சொத்து விகிதம் (சிஆர்ஏஆர்) 9 சதவீதமாக இருக்க வேண்டும். நடப்பாண்டு மார்ச் இறுதி நிலவரப்படி,  அனைத்து 18 பொதுத் துறை வங்கிகளும் இந்த குறைந்தபட்ச சிஆர்ஏஆர் விதிமுறையை பூர்த்தி செய்துள்ளன என்றார் அவர்.
 

More from the section

ரூ.27 ஆயிரத்தை நெருங்குகிறது தங்கம்
ஏர்டெல்லை பின்னுக்குத் தள்ளி  ரிலையன்ஸ் ஜியோ 2-ஆம் இடம்
அதிக டிஜிட்டல் மயமாக்கப்பட்ட மாநிலங்கள்:  தமிழகத்துக்கு 4-ஆம் இடம்
கரூர் வைஸ்யா வங்கி மொத்த வணிகம் ரூ.1.10 லட்சம் கோடி
பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சி