சனிக்கிழமை 20 ஜூலை 2019

ஹுண்டாயின் முழு முதல் மின்சார கார் கோனா அறிமுகம்

DIN | Published: 10th July 2019 12:49 AM


தென் கொரியாவைச் சேர்ந்த ஹுண்டாய் நிறுவனம் அதன் முழு மின்சார கோனா சொகுசு காரை செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தியது. தனிநபர் பயன்பாட்டுக்கு மின்சார வாகனங்களை பயன்படுத்த மத்திய அரசு ஆதரவளித்து வரும் நிலையில் ஹுண்டாய் இப்புதிய மின்சார காரை அறிமுகம் செய்துள்ளது.
இதுகுறித்து ஹுண்டாய் மோட்டார் இந்தியாவின் நிர்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான எஸ்.எஸ்.கிம் தெரிவித்துள்ளதாவது:
மின்சார வாகனங்களை வாங்குவோருக்கு மத்திய பட்ஜெட்டில் வரி சலுகைகளை அறிவித்துள்ளது அத்துறை முன்னேற்றத்துக்கு சாதகமான அம்சமாகவே பார்க்கப்படுகிறது. இருப்பினும், இந்தியாவில் மின்சார வாகனங்களை மேலும் தீவிரமாக பரவலாக்க அரசு செய்ய வேண்டியது இன்னும் அதிகமாகவே உள்ளது.
இந்தியாவில் மின்சார வாகனங்களின் தேவை உணர்ந்து தற்போது நிறுவனம் கோனா காரை அறிமுகம் செய்துள்ளது. நிலையான தர சோதனை அடிப்படையில் இப்புதிய காரை ஒரு முறை சார்ஜ் செய்வதன் மூலமாக 452 கி.மீ. வரை செல்லலாம். 
ஏர்பேக், ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம்ஸ், டயர்அழுத்தம் கண்காணிப்பு அமைப்பு, பின்பக்க கேமரா உள்ளிட்ட பல்வேறு அதிநவீன வசதிகளுடன் வெளிவந்துள்ள இந்த காரின் விலை ரூ.25.3 லட்சமாக  நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வரும் 2025-ஆம் ஆண்டுக்குள், 23 முழு மின்சார மாடல் உள்பட சுற்றுச்சூழலுக்கு உகந்த 44 தயாரிப்புகளை அறிமுகப்படுத்த ஹுண்டாய் உறுதிபூண்டுள்ளது என்றார் அவர்.
 

More from the section

ஏர்டெல்லை பின்னுக்குத் தள்ளி  ரிலையன்ஸ் ஜியோ 2-ஆம் இடம்
அதிக டிஜிட்டல் மயமாக்கப்பட்ட மாநிலங்கள்:  தமிழகத்துக்கு 4-ஆம் இடம்
கரூர் வைஸ்யா வங்கி மொத்த வணிகம் ரூ.1.10 லட்சம் கோடி
பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சி
ஏர்டெல்லை பின்னுக்குத்தள்ளி 2-ஆம் இடம்பிடித்தது ஜியோ!