சனிக்கிழமை 20 ஜூலை 2019

மெர்ஸிடிஸ்-பென்ஸ் நிறுவனம் இந்திய விற்பனை பிரிவு தலைவராக சந்தோஷ் ஐயர் நியமனம்

DIN | Published: 14th June 2019 12:52 AM


மெர்ஸிடிஸ்-பென்ஸ் நிறுவனத்தின் இந்திய விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் பிரிவு தலைவராக சந்தோஷ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து மெர்ஸிடிஸ்-பென்ஸ் இந்தியாவின் நிர்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான மார்டின் ஸ்வெங்க் கூறியுள்ளதாவது:
உலக அளவில் ஆடம்பர சொகுசு கார் பிரிவில் மெர்ஸிடிஸ்-பென்ஸ் நிறுவம் முன்னோடியாகத் திகழ்ந்து வருகிறது. இந்த நிலையில், நிறுவனத்தின் வளர்ச்சியை அதிகரிக்கும் விதத்தில் விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் பிரிவில் 2019-ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி முதல் மாற்றங்களை ஏற்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, தற்போது வாடிக்கையாளர் சேவை மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் துறை துணைத் தலைவராக இருக்கும் சந்தோஷ் ஐயரை, மெர்ஸிடிஸ்-பென்ஸ் இந்தியாவின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் பிரிவு தலைவராக நியமிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இப்புதிய நியமனம் வரும் ஜூலை-1 முதல் அமலுக்கு வருகிறது.
ஏற்கெனவே இப்பொறுப்புகளை வகித்து வரும் மைக்கேல் ஜாப், மலேசியாவில் மெர்ஸிடிஸ்-பென்ஸ் நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் பிரிவின் தலைமை பொறுப்பை ஏற்கவுள்ளார் என்றார் மார்டின் ஸ்வெங்க்.
 

More from the section

ரூ.27 ஆயிரத்தை நெருங்குகிறது தங்கம்
ஏர்டெல்லை பின்னுக்குத் தள்ளி  ரிலையன்ஸ் ஜியோ 2-ஆம் இடம்
அதிக டிஜிட்டல் மயமாக்கப்பட்ட மாநிலங்கள்:  தமிழகத்துக்கு 4-ஆம் இடம்
கரூர் வைஸ்யா வங்கி மொத்த வணிகம் ரூ.1.10 லட்சம் கோடி
பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சி