சனிக்கிழமை 20 ஜூலை 2019

கியா மோட்டார்ஸின் செல்டோஸ் கார் அறிமுகம்

DIN | Published: 21st June 2019 12:48 AM
சொகுசு வகை செல்டோஸ் காரை வியாழக்கிழமை அறிமுகப்படுத்தும் கியா மோட்டார்ஸ் கார்ப்பரேஷன் தலைவர் ஹன்-வூ பார்க் (வலது).  உடன் கியா மோட்டார்ஸ் இந்தியாவின் கூக்யுன் ஷிம்,


தென் கொரிய நிறுவனமான கியா மோட்டார்ஸ்,  தனது சொகுசு வகை தயாரிப்பான செல்டோஸ் காரை இந்திய சந்தைகளில் வியாழக்கிழமை அறிமுகப்படுத்தியது.
இதுகுறித்து கியா மோட்டார்ஸ் கார்ப்பரேஷன் தலைவரும், தலைமை செயல் அதிகாரியுமான ஹன்-வூ பார்க் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நிறுவனத்தின் சர்வதேச விரிவாக்க திட்டங்களுக்கு இந்தியா மிக முக்கிய மையமாக உள்ளது. கியா மோட்டார்ஸின் எதிர்கால வெற்றிக்காக மிகப்பெரிய ஆற்றல் மற்றும் வளங்களை முதலீடு செய்துள்ளோம்.
அதன் ஒரு பகுதியாக தற்போது சர்வதே அளவில் பெரும் வரவேற்பைப் பெற்ற   செல்டோஸ் காரை அறிமுகப்படுத்தியுள்ளோம். 
இந்திய சந்தையை மனதில் வைத்து பிரத்யேகமாக இந்தக் காரை வடிவமைப்பு செய்து மேம்படுத்தியுள்ளோம்.
ஆந்திர மாநிலம் அனந்தபூர் ஆலையில் உற்பத்தி செய்யப்படும் செல்டோஸ் கார், மத்திய கிழக்கு , ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா மற்றும் இதர ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் 
அடுத்த இரண்டு ஆண்டுகளில் அனந்தபூர் ஆலையில்  செல்டோஸ் உள்ளிட்ட நான்கு புதிய மாடல் கார்களை தயாரித்து வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் கியா நிறுவனம் 200 கோடி டாலரை முதலீடு செய்துள்ளது. அனந்தபூர் ஆலை 110 கோடி டாலர் மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. 
இது, ஆண்டுக்கு 3 லட்சம் கார்களை உற்பத்தி செய்யும் திறனுடையது.
கியா மோட்டார்ஸ் இந்தியாவில் 265 விநியோகஸ்தர் மற்றும் சேவை மையங்களுடன் தனது பயணத்தை தொடங்கியுள்ளது. இது, 2020-இல் 300-ஆகவும், 2021-இல் 350-ஆகவும் அதிகரிக்கப்படும் என்றார் அவர்.


 

More from the section

ஏர்டெல்லை பின்னுக்குத் தள்ளி  ரிலையன்ஸ் ஜியோ 2-ஆம் இடம்
அதிக டிஜிட்டல் மயமாக்கப்பட்ட மாநிலங்கள்:  தமிழகத்துக்கு 4-ஆம் இடம்
கரூர் வைஸ்யா வங்கி மொத்த வணிகம் ரூ.1.10 லட்சம் கோடி
பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சி
ஏர்டெல்லை பின்னுக்குத்தள்ளி 2-ஆம் இடம்பிடித்தது ஜியோ!