சனிக்கிழமை 20 ஜூலை 2019

டாப் 10 பட்டியல்: மாருதி நிறுவனத்தின் 8 கார்கள்: விற்பனையில் அமோகம்

DIN | Published: 25th June 2019 12:56 AM

பயணிகள் வாகன விற்பனைச் சந்தையில் 18 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிவு ஏற்பட்ட போதிலும், கடந்த மே மாதத்தில் அதிகம் விற்பனையான டாப் 10 வாகனங்களின் பட்டியலில், மாருதி சுஸுகி இந்தியா நிறுவனத்தின் 8 ரக கார்கள் இடம்பெற்றுள்ளன.
இந்திய வாகன உற்பத்தியாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அந்தப் பட்டியலில் கூறப்பட்டுள்ளதாவது:
மக்கள் அதிகம் விரும்பும் மாருதி நிறுவனத்தின் ஸ்விஃப்ட் கார்கள் கடந்த மாதம் 17,039 விற்பனையாகி முதலிடத்தைப் பிடித்துள்ளது.
அந்த நிறுவனத்தின் ஆல்டோ கார் 2-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. அதில், 16,394 கார்கள்  விற்பனையாகின. மேலும், அந்த நிறுவனத்தின் டிசையர் ரகம் 16,196 கார்களும், பலேனா ரகம் 15,176 கார்களும் விற்பனையாகி முறையே 3-ஆவது, 4-ஆவது இடத்தைப் பிடித்துள்ளன.
அதைத் தொடர்ந்து, மாருதி வேகன்-ஆர் ரகம் 14,561 கார்கள் விற்பனையாகி 5-ஆவது இடத்திலும், அந்த நிறுவனத்தின் ஈக்கோ வேன் 11,739 விற்பனையாகி 6-ஆவது இடத்திலும் உள்ளன. 7-ஆவது மற்றும் 8-ஆவது இடத்தை ஹுண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் கைப்பற்றியுள்ளது. அந்த நிறுவனத்தின் கிரீட்டா ரகம் 9,054 கார்கள் விற்பனையாகி 7-ஆவது இடத்திலும், எலைட் ஐ20 ரகம் 8,958 கார்கள் விற்பனையாகி 8-ஆவது இடத்திலும் உள்ளன.
மாருதி நிறுவனத்தின் எர்டிகா கார்கள் விற்பனையில் 9-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்த மாடல் கார்கள் 8,864 விற்பனையாகின. மேலும், இதே நிறுவனத்தின் விட்டாரா பிரிஸா ரக கார்கள் 10-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்த ரக கார்கள், கடந்த மாதம் 8,781 விற்பனையாகின. 
கடந்த ஆண்டு மே மாதத்தில் இந்த ரக கார்கள் 15,629 விற்பனையாகி, 6-ஆவது இடத்தில் இருந்தது.
நாடு முழுவதும் கடந்த 18 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பயணிகள் வாகனங்களின் விற்பனை ஒட்டுமொத்தமாக சரிவடைந்துள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் 3,01,238 வாகனங்கள் விற்பனையாகி இருந்தன. ஆனால், கடந்த மாதம் வாகன விற்பனை 20 சதவீதம் குறைந்து 2,39,347 வாகனங்கள் விற்பனையாகின.
 

More from the section

ஏர்டெல்லை பின்னுக்குத் தள்ளி  ரிலையன்ஸ் ஜியோ 2-ஆம் இடம்
அதிக டிஜிட்டல் மயமாக்கப்பட்ட மாநிலங்கள்:  தமிழகத்துக்கு 4-ஆம் இடம்
கரூர் வைஸ்யா வங்கி மொத்த வணிகம் ரூ.1.10 லட்சம் கோடி
பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சி
ஏர்டெல்லை பின்னுக்குத்தள்ளி 2-ஆம் இடம்பிடித்தது ஜியோ!