சனிக்கிழமை 20 ஜூலை 2019

பேட்டரி வாகனங்கள் குறித்த திட்டம்: டிவிஎஸ், பஜாஜ் ஆட்சேபம்

DIN | Published: 25th June 2019 12:55 AM


இருசக்கர, மூன்று சக்கர மோட்டார் வாகன பயன்பாட்டிலிருந்து 2025ஆம் ஆண்டுக்குள் பேட்டரி வாகன பயன்பாட்டுக்கு மாற்றுவது தொடர்பான திட்டத்துக்கு டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், பஜாஜ் ஆட்டோ நிறுவனம் ஆகியன ஆட்சேபம் தெரிவித்துள்ளன.
மோட்டார் வாகன தயாரிப்பாளர்கள் கூட்டமைப்பான இந்தியன் ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பிடம் நீதி ஆயோக் அமைப்பு கடந்த வாரம், இருசக்கர் மோட்டார் வாகன பயன்பாட்டிலிருந்து 2025ஆம் ஆண்டுக்குள் பேட்டரி வாகன பயன்பாட்டுக்கு மாற்றுவது தொடர்பான திட்டத்தை  2 வாரங்களில் சமர்ப்பிக்கும்படி கோரியிருந்தது.
இதற்கு டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், பஜாஜ் ஆட்டோ நிறுவனம் ஆகியன ஆட்சேபம் தெரிவித்துள்ளன. 
இதுகுறித்து டிவிஎஸ் மோட்டார் நிறுவன தலைவரும், நிர்வாக இயக்குநருமான வேணு ஸ்ரீநிவாசன் கூறுகையில், 
இதுவொன்றும் ஆதாரோ, தொழில்நுட்பமோ, பதிவு அட்டைகளோ கிடையாது. ஒட்டுமொத்த விநியோக அமைப்பையும் இதற்காக ஏற்படுத்த வேண்டும் என்றார்.
பஜாஜ் ஆட்டோ நிறுவன நிர்வாக இயக்குநர் ராஜீவ் பஜாஜ் கூறுகையில், 100 சதவீத மாற்றம் தேவையில்லாத ஒன்று என்றார்.

More from the section

ரூ.27 ஆயிரத்தை நெருங்குகிறது தங்கம்
ஏர்டெல்லை பின்னுக்குத் தள்ளி  ரிலையன்ஸ் ஜியோ 2-ஆம் இடம்
அதிக டிஜிட்டல் மயமாக்கப்பட்ட மாநிலங்கள்:  தமிழகத்துக்கு 4-ஆம் இடம்
கரூர் வைஸ்யா வங்கி மொத்த வணிகம் ரூ.1.10 லட்சம் கோடி
பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சி