சனிக்கிழமை 23 மார்ச் 2019

விளம்பரங்களில் இனி நடிக்க மாட்டேன்: சிவகார்த்திகேயன் அறிவிப்பு

By எழில்| DIN | Published: 04th December 2017 12:23 PM

 

சிவகார்த்திகேயன், நயன்தாரா, ஃபகத் பாசில் நடிப்பில் மோகன் ராஜா இயக்கியுள்ள படம் - வேலைக்காரன். 24ஏம் ஸ்டூடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. டிசம்பர் 22 அன்று வெளிவருகிறது.

அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் நேற்று வெளியிடப்பட்டன.

இசை வெளியீட்டு விழாவில் படக்கதாநாயகன் சிவகார்த்திகேயன் பேசியதாவது: 

அனிருத் இல்லையென்றால் சிவகார்த்திகேயன் இல்லை என்று ட்விட்டரில் சொல்வார்கள். அது உண்மை. அதைக் கேட்கும்போது மகிழ்ச்சியாக இருக்கும். நான் நடித்த 11 படங்களில் 6 படங்களுக்கு அனிருத் இசையமைத்துள்ளார். 

இனிமேல் நான் விளம்பரப் படங்களில் நடிக்க மாட்டேன். இதற்கு முன்பு ஒரு விளம்பரத்தில் நடித்துள்ளேன். இந்தப் படத்தில் வருகிற ஒரு காட்சியில் நிஜ மருத்துவர் நடித்தார். அந்தக் காட்சியின்போது அனைவருமே உணர்ச்சிவசப்பட்டுவிட்டோம். அப்போதுதான் இந்த முடிவை எடுத்தேன். நான் நடிக்கும் விளம்பரம், எந்த ஒரு காரணத்துக்காகவும் யாருக்கும் சிறிய கெடுதல் கூட உண்டுபண்ணிவிடக்கூடாது. அதனால் விளம்பரங்களில் இனி நான் நடிக்கமாட்டேன் என்று கூறினார். சிவகார்த்திகேயனின் இந்த அறிவிப்புக்கு அரங்கில் பலத்த வரவேற்பு கிடைத்தது.

Tags : Sivakarthikeyan Velaikkaran audio launch

More from the section

ஒருவர் சினிமாவுக்காக இந்தளவுக்கு உண்மையாக இருக்க முடியுமா?: சூர்யா வியக்கும் இயக்குநர்!
உறியடி 2 படத்தின் டீசர் வெளியீடு!
விஜய் இயக்கும் படத்தில் ஜெயலலிதாவாக நடிக்கும் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா!
பொள்ளாச்சி சம்பவம் தூக்கத்தை கெடுக்கிறது: திரைப்பட விழாவில் வைரமுத்து
2019-ல், அதிக முதல் நாள் வசூலைக் கண்ட ஹிந்திப் படம்!