21 ஏப்ரல் 2019

க்யூட் குழந்தையை கொஞ்சி மகிழ்ந்த நயன்தாரா! வைரலாகிய விடியோ (இணைப்பு)

DIN | Published: 18th December 2018 03:07 PM

 


ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் நயன்தாரா நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு தற்போது வெளிநாட்டில் நடைபெற்று வருகிறது. ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் ராதிகா, சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். ஹிப் ஹாப் ஆதி இசையமைத்து வருகிறார். ஏப்ரல் அல்லது மே மாதம் இப்படம் திரைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் சென்னையில் படப்பிடிப்பு முடித்து படக்குழுவினர் வெளிநாட்டுக்குச் சென்று ஒரு பாடல் காட்சியை படமாக்கம் செய்தனர். படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த இடைவெளி சமயத்தில், நடிகை நயன்தாராவிடம் அங்கு வந்திருந்த குழந்தை ஒன்று கொஞ்சி விளையாடும் விடியோ  இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அக்குழந்தையின் க்யூட்டான செயல்களால் நயன்தாரா பெரிதும் கவரப்பட்டார். நயன்தாராவை கட்டிப் பிடிப்பது, அவர் செய்தது போலவே செல்ஃபிக்கு போஸ் கொடுப்பது, கன்னத்தில் செல்லமாக குத்துவது ஆகிய செயல்களைச் செய்த அக்குழந்தைக்கு பலர் ரசித்து வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.