21 ஏப்ரல் 2019

இமைக்கா நொடிகள் குட்டிப்பெண் 'மானஸ்வி' யார் தெரியுமா?

By சரோஜினி| DIN | Published: 19th November 2018 01:55 PM

 

சமீபத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, அதர்வா நடிப்பில் வெளிவந்த ‘இமைக்கா நொடிகள்’ திரைப்படத்தில் அவர்களுடன் இணைந்து நடித்திருந்த குட்டிப்பெண் ‘மானஸ்வியை’ அத்தனை சீக்கிரம் யாராலும் மறந்திருக்க முடியாது. அந்தக்குட்டிப்பெண் யார் தெரியுமா? சில வருடங்களுக்கு முன் பிரபு தேவா நடிப்பில் பெண்ணின் மனதைத் தொட்டு என்றொரு திரைப்படம் வெளிவந்ததே நினைவிருக்கிறதா? படம் நினவிருக்கிறதோ இல்லையோ அதில் பாடல்கள் அனைத்துமே ஹிட் என்பதால் அதை பெரும்பாலானோர் மறந்திருக்க வாய்ப்பில்லை. ‘கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... உள்ளிட்ட எவர்க்ரீன் ஹிட் பாடல்கள் கொண்ட படம் அது. படத்தில் சிறப்புத் தோற்றத்தில் சரத்குமாரும் உண்டு.

அத்திரைப்படத்தில் முதன்மை நகைச்சுவை நடிகராக விவேக், மயில்சாமி உள்ளிட்டோர் நடித்திருந்தாலும் அரசியல்வாதியின் மகனாக நடித்த விவேக்குடன் உதவியாளர் வேடத்தில் நடித்த நகைச்சுவை நடிகர் கொட்டாச்சியும் அதிகமாக கவனம் ஈர்த்தார் என்று சொல்லலாம். கொட்டாச்சியின் தூக்கலான முன்பற்களை வைத்து விவேக் செய்யும் காமெடிக்கு அப்போது தியேட்டர் அதிர்ந்தது. அந்தப் படத்தைத் தொடர்ந்து மேலும் பல திரைப்படங்களில் கொட்டாச்சி மெயின் நகைச்சுவை நடிகர்களுடன் துணையாக திரைப்படங்களில் நகைச்சுவைக் காட்சிகளில் தோன்றி வந்தாலும் அவருக்கென்று பிரத்யேக இடமென்று ஒன்று கோலிவுட்டில் கிடைத்ததா என்றால் அவர் ‘இல்லை’ என்றே சொல்லக்கூடும். கொட்டாச்சிக்கு தான் அந்த வாய்ப்பு அமையவில்லையே தவிர, அவரது மகளுக்கு சிறந்த குழந்தை நட்சத்திரம் என்ற அங்கீகாரம் வெகு சீக்கிரத்திலேயே கிடைத்து விட்டதெனக் கூறலாம். ஆம், இமைக்கா நொடிகளில் வரும் குழந்தை நட்சத்திரம் மானஸ்வி... நகைச்சுவை நடிகர் கொட்டாச்சியின் மகளே! 

Tags : நகைச்சுவை நடிகர் கொட்டாச்சி பேபி மானஸ்வி comedian kottachi baby manasvi imaika nodigal nayanthara

More from the section

தளபதி 63 படத்துக்கு தடை கோரி வழக்கு
விஷால் நடித்துள்ள அயோக்யா: டிரெய்லர் வெளியீடு!
‘டுலெட்’ டுக்கு டூ லேட்டாக ஒரு திரை விமர்சனம்!
அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்திற்கு எதிராக கதைத்திருட்டு வழக்கு 
ரூ. 2 கோடி சம்பளம்: அழகு சாதனப் பொருள் விளம்பரப் படத்தில் நடிக்க மறுத்தார் சாய் பல்லவி!