புதன்கிழமை 24 ஏப்ரல் 2019

நயன்தாரா, ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் ஷாருக்கான் நடித்துள்ள வைரலாகும் விடியோ!

By சினேகா| DIN | Published: 20th November 2018 12:50 PM

 

லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகை நயன்தாரா தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாகத் திகழ்கிறார். அண்மையில் தனது 34-வது பிறந்த நாளைக் கொண்டாடி மகிழ்ந்த நயன்தாரா, பெண் மையக் கநாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்து வருகிறார். 

நயன்தாராவின் பிறந்த நாளன்று பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுடன் அவர் நடித்த ஆல்பம் ஒன்றின் புரோமோவை இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டார். ‘ஜெய்ஹிந்த் இந்தியா...’ எனும் அந்த விடியோ இணையத்தில் வெளியானதிலிருந்து  பரபரப்பாக கவனம் பெற்று வைரலாகி வருகிறது.  இந்த விடியோவில் நடிகர் ஷாருக்கான், நயன்தாரா, ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ளனர். இந்த ஆல்பத்தில் ரஹ்மானுடன் இணைந்து ஸ்வேதா மோகன், டிரம்ஸ் சிவமணி, நீதி மோகன், சாக்ஷா த்ரிபாதி உள்ளிட்டோரும் பங்காற்றியுள்ளனர்

கவிஞர் குல்சார் பாடல் வரிகளை எழுதியுள்ளார். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த புரோமோ வீடியோவை ஏ.ஆர்.ரகுமான் தனது யூடியூப் பக்கத்தில் இவெளியிட்டுள்ளார். இரண்டே நாட்களில் ஆறு லட்சத்துக்கும் மேலான பார்வையாளர்களைப் பெற்றுள்ளது இந்த விடியோ. இந்திய ஹாக்கி அணியை பெருமைப்படுத்தும் விதமாகவும், அவர்களுக்கு ஊக்கம் அளிக்கிற விதமாகவும் இந்த விடியோ உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Jai Hind A R Rehman Sharukh Khan Nayanthara நயன்தாரா ஷாருக் கான் ஏ.ஆர்.ரஹ்மான் ஜெய் ஹிந்த் ஹாக்கி

More from the section

களவாணி 2 பட உரிமை என்னிடமே உள்ளது: விமல், இயக்குநர் சற்குணம் மீது புகார் கூறும் தயாரிப்பாளர்
விஜய் 63 படப்பிடிப்பில் விபத்து: காயமடைந்தவரை நேரில் விசாரித்த விஜய்! (விடியோ)
டிக் டாக்கைத் தடை செய்வதா?: நடிகை கஸ்தூரி எதிர்ப்பு!
விஜய் - அட்லி படத்தில் வில்லனாக நடிக்கிறார் ஷாருக் கான்?
என்ன உட்கார வெச்சு மணப்பெண் போன்று நலுங்கு பண்ணிறியே மிஷ்கின்: வெட்கப்பட்ட ஷங்கர்!