வெள்ளிக்கிழமை 22 மார்ச் 2019

சர்கார் இசை வெளியீட்டு விழாவில் பரபரப்பை ஏற்படுத்திய விஜய் பேச்சு! (விடியோ)

By எழில்| DIN | Published: 03rd October 2018 11:24 AM

 

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படம் சர்கார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ராதாரவி, பழ.கருப்பையா, வரலட்சுமி சரத்குமார், யோகிபாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்துக்காக ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்த சிம்டாங்காரன் என்கிற பாடல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அடுத்தப் பாடலாக, ஒரு விரல் புரட்சி என்கிற பாடல் வெளியானது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவில் அனைத்து பாடல்களும் வெளியிடப்பட்டன.

இந்த இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய்யின் பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியது.

சர்கார் படத்தில் முதலமைச்சர் வேடத்தில் நடிக்கவில்லை. நிஜத்தில் நான் முதலமைச்சரானால் நடிக்க மாட்டேன் என்று பேசினார் விஜய். 

அவர் மேலும் பேசியதாவது: மெர்சல் படத்தில் அரசியல் இருந்தது. ஆனால் சர்கார் படத்தில் அரசியலில் மெர்சல் செய்துள்ளார் முருகதாஸ். நாங்கள் சர்கார் அமைத்துவிட்டு தேர்தலில் நிற்கிறோம் (அதாவது படத்தை வெளியிடுகிறோம்); பிடித்தால் படத்திற்கு ஓட்டு போடுங்கள். தலைவன் நல்லவனாக இருந்தால் எல்லாமே நல்லதாக மாறும். நெருக்கடியான நேரத்தில் ஒரு நல்ல தலைவன் வருவார். அவர் நல்ல சர்கார் அமைப்பார் என அரசியல் கலந்து பேசினார் விஜய். அந்தப் பேச்சின் விடியோ:

 

Tags : vijay Sarkar audio launch

More from the section

விஜய் - அட்லி படத்தில் இணைந்துள்ள பிரபல பாலிவுட் நடிகர்!
விஜய் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் நடித்துள்ள வாட்ச்மேன் பட டிரெய்லர்!
‘பிஎம் நரேந்திர மோடி’ படம்: டிரெய்லர் வெளியீடு!
விக்னேஷ் சிவன் இயக்கும் சிவகார்த்திகேயன் படம்: அதிகாரபூர்வ அறிவிப்பு!
வெளியானது நயன்தாராவின் 'ஐரா' ட்ரைலர்