24 மார்ச் 2019

இது வெட்கக்கேடான விஷயம்! சீமானுக்கு பதிலடி கொடுத்த சித்தார்த்!

DIN | Published: 14th October 2018 02:42 PM

 

அண்மையில் செய்தியாளர்களை சந்திப்பில் சீமான் பேசுகையில், வைரமுத்து விவகாரம் குறித்து தன் கருத்தை கூறினார். இவ்விஷயத்தில் சின்மயி முதலிலேயே வெளியில் சொல்லி இருக்க வேண்டும். ஆனால் அவரது திருமணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் வைரமுத்துவுடன் சிரித்து பேசிக் கொண்டிருக்கிறார் என விமரிசித்திருந்தார். வைரமுத்து என் தகப்பனுக்கு ஒப்பானவர். அவரது அடையாளத்தை அழிக்கும் முயற்சிதான் இது. சம்பவம் நிகழ்ந்த போது சொல்லியிருந்தால் சரி, 15 ஆண்டுகள். பழி சுமத்தி களங்கப் படுத்த வேண்டிய அவசியம் என்ன. கோதரி சின்மயி, திருமண விழாவிற்கு வந்ததிலிருந்து தொடர்ந்து பணியாற்றிவரும் நிலையில், அப்போது வெளிக்காட்டாமல் இப்போது மீடூ இயக்கம் வந்தபின் சொல்வதன் காரணம் இது திட்டமிட்டு அசிங்கப்படுத்துகின்ற செயல் தான்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகர் சித்தார்த், 'சீமானுக்கு கடுமையான கண்டனங்கள். சிறுமதி உடையவர்கள், பெண் வெறுப்பாளர்கள் சமூகத்தின் எல்லா தளத்திலும் இருக்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டேன். 

தன் சொந்தத் தகப்பனால் மானபங்கப்படுத்தப்படும் பெண்கள் பின்னாளில் அவர்களுடன் சிரித்துப் பேசும் அவல நிலை நம் சமூகத்தில் நிலவுகிறது. இது வெட்கக்கேடான விஷயம்' என்று டிவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

Tags : வைரமுத்து vairamuthu சீமான் Chinmayi Siddharth சின்மயி நடிகர் சித்தார்த்

More from the section

ஜெயலலிதா வாழ்க்கை திரைப்படமாகிறது!
ஒருவர் சினிமாவுக்காக இந்தளவுக்கு உண்மையாக இருக்க முடியுமா?: சூர்யா வியக்கும் இயக்குநர்!
உறியடி 2 படத்தின் டீசர் வெளியீடு!
விஜய் இயக்கும் படத்தில் ஜெயலலிதாவாக நடிக்கும் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா!
பொள்ளாச்சி சம்பவம் தூக்கத்தை கெடுக்கிறது: திரைப்பட விழாவில் வைரமுத்து