24 மார்ச் 2019

வைரமுத்து மீதான பாலியல் புகார் குறித்த கேள்விக்கு நிருபர்களிடம் சீறிய பாரதிராஜா!

By எழில்| DIN | Published: 16th October 2018 12:14 PM

 

அண்​மைக் கால​மாகச் சமூக வலை​த​ளங்​க​ளில் மீ டூ எனும் தலைப்​பில் பெண்​கள் தங்​க​ளுக்கு நேர்ந்த பாலி​யல் துன்​பு​றுத்​தல்​க​ளை​யும், கொடு​மை​க​ளை​யும் பகிர்ந்து வரு​வது பர​வ​லாகக் கவ​னத்​தைப் பெற்று வரு​கி​றது. குறிப்​பாக, சில முக்​கிய பிர​மு​கர்​க​ளுக்கு எதி​ராக முன்​வைக்​கப்​ப​டும் குற்​றச்​சாட்​டு​க​ளும் பெரும் பர​ப​ரப்பை ஏற்​ப​டுத்தி வரு​கின்​றன.

இந்நிலையில், கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி பாலியல் புகார் கூறியுள்ளார். இதையடுத்து இந்த விவகாரம் குறித்து இயக்குநர் பாரதிராஜாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இலங்கையிலுள்ள கிளி நொச்சியில் நடைபெற்ற திரைப்பட விழா ஒன்றுக்கு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார் பாரதிராஜா. பிறகு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மீ டூ தொடர்பான கேள்வியை எதிர்கொண்டவுடன் ஆவேசமடைந்தார் பாரதிராஜா. அதைத் தொடர்ந்து அவர் பேசியதாவது:

என்ன பிரச்னை, நீ பார்த்தியா, கேள்விப்பட்டியா, கேள்விப்பட்டதற்கு எல்லாம் பதில் சொல்லமுடியாது. என்னிடம் இதற்கு ஆதாரம் இருக்கிறது என்று சொல்லுங்கள். பதில் சொல்கிறேன். என்னிடம் வேறு எந்தக் கேள்வியும் கேட்காதீர்கள் என்று கோபமாகப் பதில் அளித்தார். 

Tags : Bharathiraja Vairamuthu

More from the section

ஜெயலலிதா வாழ்க்கை திரைப்படமாகிறது!
ஒருவர் சினிமாவுக்காக இந்தளவுக்கு உண்மையாக இருக்க முடியுமா?: சூர்யா வியக்கும் இயக்குநர்!
உறியடி 2 படத்தின் டீசர் வெளியீடு!
விஜய் இயக்கும் படத்தில் ஜெயலலிதாவாக நடிக்கும் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா!
பொள்ளாச்சி சம்பவம் தூக்கத்தை கெடுக்கிறது: திரைப்பட விழாவில் வைரமுத்து