சனிக்கிழமை 23 மார்ச் 2019

மீ டூ: நடிகர் தியாகராஜன் மீது இளம் பெண் பாலியல் குற்றச்சாட்டு 

DIN | Published: 21st October 2018 07:06 PM

 

சென்னை: நடிகர் தியாகராஜன் மீது அவர் இயக்கிய படத்தில் பணியாற்றிய இளம் பெண் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டு கூறியுள்ளார். 

'மீ டூ' என்ற தலைப்பில் பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகளை சுட்டுரை மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாகப் பகிர்ந்து வருகின்றனர். அண்மையில் நடிகைகள் தனு ஸ்ரீ தத்தா, கங்கனா ராவத், பாடகி சின்மயி ஆகியோர் திரைத் துறையில் தாங்கள் எதிர்கொண்ட சில கசப்பான அனுபவங்களை அதில் குறிப்பிட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதேபோல கவிஞர் மற்றும் குறும்பட இயக்குனர் லீனா மணிமேகலை, தொலைக்காட்சி தொகுப்பாளினி ஸ்ரீரஞ்சினி உள்ளிட்டோரும் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் மீது குற்றச்சாட்டை வைத்துள்ளனர். சனிக்கிழமையன்று நடிகை ஸ்ருதி ஹரிஹரன் பிரபல நடிகர் அர்ஜுன், தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக பாலியல் குற்றச்சாட்டை கூறினார். 

இந்நிலையில் நடிகர் தியாகராஜன் மீது அவர் இயக்கிய படத்தில் பணியாற்றிய இளம் பெண் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டு கூறியுள்ளார். 

மறைந்த திமுக தலைவர் கருணாநிதி கதை வசனத்தில் உருவான 'பொன்னர் - சங்கர்' படத்தை நடிகர் தியாகராஜன் இயக்கிக்கினார். அந்த படத்தில் புகைப்படக்கலைஞராக பணியாற்றிய இளம்பெண் ஒருவர்தான் தியாகராஜன் மீது குற்றச்சாட்டு கூறியுளளார்.  

அந்தப் படப்பிடிப்பின்போது தியாகராஜன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தாகவும், நள்ளிரவில் தனது அறைக் கதவை அவர் தட்டினார் என்றும் அந்தப் பெண் குற்றம் சாட்டியுள்ளார். 

இதனால் திரையுலகில் மீண்டும் பரபரப்பு கிளம்பியுள்ளது. 
 

Tags : kollywood me too sexual allegations actor thiyagarajan ponnar sangar photographer

More from the section

ஒருவர் சினிமாவுக்காக இந்தளவுக்கு உண்மையாக இருக்க முடியுமா?: சூர்யா வியக்கும் இயக்குநர்!
உறியடி 2 படத்தின் டீசர் வெளியீடு!
விஜய் இயக்கும் படத்தில் ஜெயலலிதாவாக நடிக்கும் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா!
பொள்ளாச்சி சம்பவம் தூக்கத்தை கெடுக்கிறது: திரைப்பட விழாவில் வைரமுத்து
2019-ல், அதிக முதல் நாள் வசூலைக் கண்ட ஹிந்திப் படம்!