திங்கள்கிழமை 18 பிப்ரவரி 2019

சிக்ஸ் பேக்கில் மாஸ் காட்டும் காமெடி நடிகர்

DIN | Published: 12th September 2018 06:50 PM

 

நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குநர் பொன்ராம் கூட்டணி 3-ஆவது முறையாக இணைந்துள்ள சீமராஜா திரைப்படத்தில் தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகர் சிக்ஸ் பேக்கில் மாஸ் காட்ட உள்ளார்.

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் ஆகிய வெற்றிப் படங்களின் வரிசையில் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குநர் பொன்ராம் கூட்டணி 3-ஆவது முறையாக இணைந்துள்ள படம் சீமராஜா. 

24 ஏஎம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில் சமந்தா, சூரி, நெப்போலியன், சிம்ரன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இசை - இமான், ஒளிப்பதிவு - பாலசுப்ரமணியம், பாடல்கள் - யுகபாரதி. தொலைக்காட்சி உரிமையை சன் டிவி பெற்றுள்ளது. இப்படத்துக்குத் தணிக்கையில் யு சான்றிதழ் கிடைத்துள்ளது. 

செப்டம்பர் 13-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகும் இப்படத்தில் நடித்துள்ள தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகர் சூரி, புது அவதாரம் எடுத்துள்ளார். இதுதொடர்பாக இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது அவர் கூறியிருந்த நிலையில், சிக்ஸ் பேக்கில் மாஸ் காட்டும் சூரியின் புகைப்படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார். மேலும் அதில், 8 மாத உழைப்புக்கு பின் சூரி சிக்ஸ் பேக்கில் மாறியுள்ளார். இப்புகைப்படத்தை பகிர்வதில் மகிழ்ச்சியடைகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

 

Tags : soori Seemaraja Sivakarthikeyan சூரி சீமராஜா சிவகார்த்திகேயன்

More from the section

பெப்சி தலைவராக ஆர்.கே.செல்வமணி மீண்டும் தேர்வு
 சிவகார்த்திகேயனின் பிறந்தநாளையொட்டி 'மிஸ்டர் லோக்கல்' பட டீசர் வெளியீடு 
கனவு இப்படியும் வருமா? மாறுபட்ட கதையம்சம் கொண்ட குறும்படம்!
ஜி.வி. பிரகாஷ் நடிக்கும் படத்தை இயக்கும் எழில்
ஏ.ஆர். ரஹ்மான் உள்ளிட்ட இசைப்பிரபலங்கள் வியந்து பாராட்டும் 12 வயது தமிழ்ச் சிறுவன்! (விடியோ)