24 மார்ச் 2019

மகள் திருமண வரவேற்புக்கு வந்தவர்களுக்கு ரஜினியின் பரிசு என்ன தெரியுமா? 

DIN | Published: 08th February 2019 07:21 PM

 

சென்னை: சென்னையில் வெள்ளியன்று நடைபெற்ற தனது மகள் திருமண வரவேற்பு நிகழ்விற்கு வந்தவர்களுக்கு, நடிகர் ரஜினி வித்தியாச பரிசு கொடுத்து அசத்தியுள்ளார்.

2010-ல் தொழிலதிபர் அஷ்வினைத் திருமணம் செய்தார் ரஜினியின் இளைய மகளான செளந்தர்யா. இவர்களுக்கு வேத் என்கிற மகன் உண்டு. செளந்தர்யா - அஷ்வின் இடையே கருத்து வேறுபாடு நிலவியதால், இருவரும் 2016-ல் குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரினார்கள். பிறகு இருவருக்கும் விவாகரத்து வழங்கப்பட்டது.

இந்நிலையில் செளந்தர்யா மறுமணம் செய்யவுள்ளார். கோவை முன்னாள் எம்எல்ஏ பொன்முடியின் சகோதரரும் தொழிலதிபருமான வணங்காமுடியின் மகன் விசாகன். இவர் 'வஞ்சகர் உலகம்' என்ற படத்தில் நடித்துள்ளார். விசாகனுடன் செளந்தர்யா ரஜினிகாந்துக்கு அடுத்த வாரம் பிப்ரவரி 11 அன்று திருமணம் நடைபெறவுள்ளது. விசாகன் ஏற்கெனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆனவர். அமெரிக்காவில் எம்பிஏ படித்து தமிழ்நாட்டில் மருந்துகள் விற்பனை செய்யும் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

வெள்ளிக்கிழமையன்று  (பிப்ரவரி 8) செளந்தர்யா - விசாகன் திருமண வரவேற்பு, கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டும் இந்தத் திருமண வரவேற்பில் கலந்து கொண்டனர். திருமண வரவேற்பின் புகைப்படங்களும் விடியோவும் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் தனது மகள் திருமண வரவேற்பு நிகழ்விற்கு வந்தவர்களுக்கு, நடிகர் ரஜினி வித்தியாச பரிசு கொடுத்து அசத்தியுள்ள தகவல் வெளியாகியுள்ளது.

திருமண வரவேற்பில் கலந்து கொண்டவர்களுக்கு, விதைப்பந்தை அன்பளிப்பாக அளித்துள்ளனர்  அந்த விதைப்பந்தில் உள்ளது எந்த மரத்தின் விதைகள் என்ற தகவலும் அதில் இடம்பெற்றுள்ளது.

 

 

பொதுவாக திருமணம் அல்லது வரவேற்பு நிகழ்வுக்கு வந்து வாழ்த்துபவர்களுக்குத் தாம்பூலப்பை கொடுப்பதே வழக்கம். இன்னும் சிலர் மரக்கன்றுகளைக் கூட கொடுத்துள்ள தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் ரஜினி தம்பதியினர் வித்தியாசமாக விதைப்பந்து கொடுத்து விருந்தினர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார்.

Tags : rajinikanth daughter soundraya second marraiage vishagan reception chennai latha gift seed ball

More from the section

ஜெயலலிதா வாழ்க்கை திரைப்படமாகிறது!
ஒருவர் சினிமாவுக்காக இந்தளவுக்கு உண்மையாக இருக்க முடியுமா?: சூர்யா வியக்கும் இயக்குநர்!
உறியடி 2 படத்தின் டீசர் வெளியீடு!
விஜய் இயக்கும் படத்தில் ஜெயலலிதாவாக நடிக்கும் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா!
பொள்ளாச்சி சம்பவம் தூக்கத்தை கெடுக்கிறது: திரைப்பட விழாவில் வைரமுத்து