21 ஏப்ரல் 2019

 சிவகார்த்திகேயனின் பிறந்தநாளையொட்டி 'மிஸ்டர் லோக்கல்' பட டீசர் வெளியீடு 

DIN | Published: 17th February 2019 05:54 PM

 

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயனின் 34ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிப்பில் உருவாகி வரும் மிஸ்டர் லோக்கல் படத்தின் டீசரை ஞாயிறன்று படக்குழு வெளியிட்டுஉள்ளது.

சீமராஜா படத்தைத் தொடர்ந்து 'சிவா மனசுல சக்தி' படப் புகழ்  இயக்குனர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் படம் மிஸ்டர் லோக்கல். இரண்டாவது முறையாக இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார்.

இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் ராதிகா, சதீஷ், யோகி பாபு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஸ்டுடியோ கிரீன் சார்பாக ஞானவேல் ராஜா தயாரிக்கும் இப்படத்திற்கு ஹிப்ஹாப் ஆதி இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் சிவகார்த்திகேயனின் 34ஆவது பிறந்தநாளை முன்னிட்டு மிஸ்டர் லோக்கல் படத்தின் டீசரை ஞாயிறன்று படக்குழு வெளியிட்டுஉள்ளது.

இப்படம்  மே 1ம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Tags : sivakarthikeyan nayanthara mr.local movie teaser birthday

More from the section

தளபதி 63 படத்துக்கு தடை கோரி வழக்கு
விஷால் நடித்துள்ள அயோக்யா: டிரெய்லர் வெளியீடு!
‘டுலெட்’ டுக்கு டூ லேட்டாக ஒரு திரை விமர்சனம்!
அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்திற்கு எதிராக கதைத்திருட்டு வழக்கு 
ரூ. 2 கோடி சம்பளம்: அழகு சாதனப் பொருள் விளம்பரப் படத்தில் நடிக்க மறுத்தார் சாய் பல்லவி!