புதன்கிழமை 20 மார்ச் 2019

ரஜினி, கமலை கலாய்த்தாரா பாடலாசிரியர் அருண் பாரதி?

By சக்திவேல்| DIN | Published: 19th February 2019 02:44 PM

 

கவிஞரும் பாடல் ஆசிரியருமான அருண் பாரதி என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்தை விமரிசித்து பேசியிருப்பது சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. அருண் பாரதி, அஜித் நடித்துள்ள விஸ்வாசம் படத்திற்கு அண்மையில் பாடல் எழுதியவர்.

ட்விட்டர் வலைதளத்தில் அவ்வப்போது தனது கருத்துக்களை தெரிவித்து வந்த அருண் பாரதி,  'நடிகன் ஓய்வுபெற்றால் தலைவனாக நினைப்பதும் ராணுவவீரன் ஓய்வு பெற்றால் வாட்ச்மேன் வேலை பார்ப்பதும் இந்த தேசத்தில் மட்டும்தான்' என பதிவிட்டிருந்தார்’. இதைப் படித்த நெட்டிசன்கள் புல்வாமாவில் துணை ராணுவ வீரர்கள் மீதான தற்கொலை படை தாக்குதலை பற்றி பதிவிடுவதற்கு ஏன் நடிகர்களை இழுக்க வேண்டும் என்று பதிலடி கொடுத்துள்ளனர்.

மேலும் இந்த ட்வீட்டில் நேரடியாக கமல் மற்றும் ரஜினி போன்ற நடிகர்களை தாக்கும் தொனி இருப்பதால் அவர்களது ரசிகர்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தி விட்டது. அருண் பாரதியை கடுமையான வார்த்தைகளால் வசைப்பாடி வருகின்றனர். இந்நிலையில் அப்பதிவை டெலீட் செய்யாமல், அதே சமயத்தில் அதற்கு பதிலாக அருண் பாரதி இன்னொரு ட்விட்டர் பதிவில் மன்னிப்பு கேட்டிருந்தார், 'யாரையும் புண்படுத்தும் நோக்கம் என் எழுத்துக்களுக்கு இல்லை. மிக மிகச் சாதரணமாக மனதில் தோன்றிய கருத்தை நான் பதிவிடுகிறேன். அதை தவறாக புரிந்து, திரித்து பரப்பாதீர்கள். யாரையேனும் புண்படுத்தினால் வருந்துகிறேன். இன்னும் கவனமாக பதிவிட முயல்கிறேன். நன்றி’ என்று பதிவிட்டுள்ளார்.

Tags : poet rajini kamal twitter புல்வாமா ரஜினி கமல் டிவிட்டர்

More from the section

நெடுநல்வாடை -விமர்சனம்
மீண்டும் இணைந்த சஞ்சய் லீலா பன்சாலி - சல்மான் கான் கூட்டணி!
மார்ச் 22 அன்று வெளியாகவுள்ள ஏழு தமிழ்ப் படங்கள்!
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகவுள்ள 2-வது படம்: அதிகாரபூர்வ அறிவிப்பு!
சாய்னா நெவால் படம்: புதிய கதாநாயகி தேர்வு!