புதன்கிழமை 20 மார்ச் 2019

ஓவியா நடித்த '90 ml' படத்தின் ரிலீஸ் தேதி ஏன் தள்ளிப் போனது?

By சினேகா| DIN | Published: 19th February 2019 03:00 PM

அனிதா உதுப் இயக்கத்தில் ஓவியா நடித்த '90 ml' படம் பிப்ரவரி 22-ம் தேதி ரிலீஸாக இருந்தது. ஆனால் தற்போது இந்தப் படம் மார்ச் 1-ம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவுத்துள்ளனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு ரசிகர்களின் மனதை கவர்ந்த ஓவியா, அதன்பின் தனது புகழைத் தக்க வைக்க கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்க முடிவு எடுத்திருந்தார். இந்நிலையில் '90 ml'படம் அவருக்கு நல்ல வாய்ப்பாக அமைந்தது. சென்ஸார் போர்ட் இந்தப் படத்துக்கு ஏ சான்றிதழ் அளித்ததும் இப்படத்துக்கான எதிர்ப்பார்ப்பை அதிகரித்துவிட்டது. அண்மையில் வெளியான படத்தின் ட்ரெய்லர் பரவலான கவனத்தைப் பெற்று மேலும் அந்த எதிர்ப்பார்ப்பினை அதிகரித்துவிட்டது. சில தொழில்நுட்பக் காரணங்களாள் '90 ml'படம் அறிவித்த தேதியில் வெளிவராது, ஆனால் மார்ச் 1-ம் தேதி அதிகாலை 5 மணிக்கு வெளியாகும் என்று ஓவியா தனது ட்விட்டரில் அறிவுத்துள்ளார்.

இந்தப் படத்துக்கு நடிகர் சிம்பு இசையமைத்துள்ளார். சிம்பு ‘சக்க போடு போடு ராஜா’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். மேலும் புத்தாண்டு வெளியீடாக சிம்பு மற்றும் ஓவியா இருவரும் மரண மட்ட ஆல்பம் வெளியிட்டார்கள். அதர்வா, மேகா ஆகாஷ் நடிப்பில் பூமராங், அருண் விஜய் நடித்த தடம், மற்றும் சாருஹாசன் நடித்த தா தா 87 ஆகிய படங்களும் மார்ச் 1 ரிலீஸாகவிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.  

Tags : Oviya ஓவியா anitha 90 ml சென்ஸார் censor

More from the section

நெடுநல்வாடை -விமர்சனம்
மீண்டும் இணைந்த சஞ்சய் லீலா பன்சாலி - சல்மான் கான் கூட்டணி!
மார்ச் 22 அன்று வெளியாகவுள்ள ஏழு தமிழ்ப் படங்கள்!
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகவுள்ள 2-வது படம்: அதிகாரபூர்வ அறிவிப்பு!
சாய்னா நெவால் படம்: புதிய கதாநாயகி தேர்வு!