புதன்கிழமை 20 மார்ச் 2019

அஜித் சந்தித்த பிரபலம் யார்? வைரலாகிய ஃபோட்டோ!

By சினேகா| DIN | Published: 19th February 2019 03:47 PM

 

அண்மையில் தனது அடுத்த படத்துக்கான படப்பிடிப்புக்காக ஹைதராபாத் சென்றிருந்தார் அஜித். அங்கு பிரபல மலையாள இயக்குநர் பிரியதர்ஷனை சந்தித்துப் பேசினார். அஜித் பிரியதர்ஷன் இருவரின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாக ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

'விஸ்வாசம்' படத்தை தொடர்ந்து எச்.வினோத் இயக்கும் பிங்க் பட ரீமேக்கில் அஜித் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் ராமோஜி ராவ் ஃப்லிம் சிட்டியில் தற்போது நடந்து வருகிறது. அதன் அருகிலேயே இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கத்தில் மலையாள நடிகர் மோகன்லால் நடிக்கும் மரக்கார் படத்தின் படப்பிடிப்பும் நடக்கிறது.

நடிகர் அஜித், இயக்குநர் பிரியதர்ஷன் இருவரும் ப்ரேக்கில் சந்தித்து உரையாடி மகிழ்ந்தனர். அப்போது புகைப்படங்கள் வெளியானதும் அஜித்தின் கெட்டப்பை தல 59 படத்தில் அவரது லுக்காக இருக்கலாம் என்றும் இப்படத்தின் பெயர் பி என்ற எழுத்தில் ஆரம்பிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

Tags : ajith priyadarshan thala 59 viswasam அஜித் விஸ்வாசம் தல 59

More from the section

நெடுநல்வாடை -விமர்சனம்
மீண்டும் இணைந்த சஞ்சய் லீலா பன்சாலி - சல்மான் கான் கூட்டணி!
மார்ச் 22 அன்று வெளியாகவுள்ள ஏழு தமிழ்ப் படங்கள்!
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகவுள்ள 2-வது படம்: அதிகாரபூர்வ அறிவிப்பு!
சாய்னா நெவால் படம்: புதிய கதாநாயகி தேர்வு!