21 ஏப்ரல் 2019

'ஐரா’வில் நயன்தாராவின் புதிய வித்யாசமான கெட்டப் இதுதான்!

By சினேகா| DIN | Published: 07th January 2019 11:07 AM

 

கே.ஜே.ஆர் ஸ்டுடியோ தயாரிப்பில், கோத்தபாடி ராஜேஷ் மற்றும் ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம் ஐரா. இந்தப் படத்தில் நயன்தாரா இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார். மாயா, டோரா, அறம், கோலமாவு கோகிலா எனத் தொடர்ந்து கதாநாயகியை மையப்படுத்தும் கதைகளில் நடித்து அசத்தி வரும் நயன்தாராவுக்கு இந்தப் படம் ஒரு மைல் கல்லாக அமையும் என்கின்றனர் படக்குழுவினர். படத்தின் டீஸரை படக்குழுவினர் அண்மையில் வெளியிட்டுள்ளனர்.

சர்ச்சைகளையும் அதே சமயம் அதிகளவு கவனம் பெற்ற குரும்படங்களான ‘லட்சுமி’மற்றும் ‘மா’ ஆகியவற்றை இயக்கிய சர்ஜுன்.கே.எம். இப்படத்தை இயக்கியுள்ளார். நடிகர் ஜெயபிரகாஷ், கலையரசன், யோகிபாபு, லீலாவதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வரும் வேளையில், படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் நயன்தாரா பவானி என்ற கதாபாத்திரத்தில் மிகவும் வித்யாசமனா கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார். இந்தப் படத்தில் நயன்தாராவின் உடல்மொழி, நடிப்பு, தோற்றம் என எல்லாவற்றிலும் ஒரு மாற்றம் இருக்கும் என இயக்குநர் சர்ஜுன் கூறினார்.

இந்த கதாபாத்திரத்தின் தோற்றத்துக்காக முகத்தில் கருப்பு நிற மேக் அப் போட்டுள்ளார் நயன்தாரா. யமுனா என்ற இன்னொரு கதாபாத்திரத்தில் வடிவமைத்துள்ளனர். இரட்டை வேடம் என்றாலும் இரண்டும் வெவ்வேறு கதாபாத்திரங்கள், இரட்டையர் அல்ல, என்றனர் படக்குழுவினர். ஹாரர் வகைமையில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் பெண் சிசுக் கொலைதான் மையக் கதை என்றனர் படக்குழுவினர்.

படத்திற்கான எதிர்ப்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில் இந்த டீஸரைப் பார்த்த ரசிகர்கள் நயன்தாராவின் நடிப்பை பாராட்டி வருகிறார்கள்.

Tags : நயன்தாரா nayanthara டீஸர் Sarjun airaa ஐரா

More from the section

தளபதி 63 படத்துக்கு தடை கோரி வழக்கு
விஷால் நடித்துள்ள அயோக்யா: டிரெய்லர் வெளியீடு!
‘டுலெட்’ டுக்கு டூ லேட்டாக ஒரு திரை விமர்சனம்!
அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்திற்கு எதிராக கதைத்திருட்டு வழக்கு 
ரூ. 2 கோடி சம்பளம்: அழகு சாதனப் பொருள் விளம்பரப் படத்தில் நடிக்க மறுத்தார் சாய் பல்லவி!