புதன்கிழமை 24 ஏப்ரல் 2019

இப்ப சொல்லுங்க,  நயன்தாரா  லேடி சூப்பர் ஸ்டாரா இல்லையா?

DIN | Published: 09th January 2019 11:43 AM

சரித்திரம் படைத்துக் கொண்டிருக்கிறார் கோலிவுட் திரையுலகின் நடிகைகளில் 'சூப்பர் ஸ்டாராக' இருக்கும் நயன்தாரா. அண்மைக் காலங்களில் நாயகிக்கு முதலிடம் கொடுத்து எழுதப்படும் திரைக்கதைகளில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார் நயன்தாரா. 

நயனின்  இந்த அணுகுமுறையை  ரசிகர்களும்  ஏற்றுக் கொண்டு ஆதரவு தந்து வருவதால், அவர் நடித்த படங்கள் எல்லாம் வசூலையும் தந்து வருகின்றன. உதாரணமாக,  நயன் நடித்து வெளிவந்த 'அறம்', 'கோலமாவு கோகிலா', 'இமைக்கா நொடிகள்' நயன்தாராவை நட்சத்திர அந்தஸ்த்திலிருந்து சூப்பர் ஸ்டார்  நிலைக்கு உயர்த்தியுள்ளன.  

இந்தச் சூழ்நிலையில் எல்லா நடிகர்கள் நடிகைகள் செய்வதை நயன்தாராவும் செய்திருக்கிறார். தனது சம்பளத்தைக் கணிசமாக உயர்த்தியிருக்கிறார். கிட்டதட்ட மும்பை நடிகைகள் வாங்கும் தொகையை அல்லது அதை விட அதிகமாகவும்  நயன் வாங்க ஆரம்பித்திருப்பதாக  சொல்லப்படுகிறது.

2018-ஆம் ஆண்டின் பட்டியலை 'ஃபோர்ப்ஸ்'  வெளியிட்டுள்ளது.   இந்த பட்டியலில் நயன்தாராவுக்கு தரப்பட்டிருக்கும் இடம் 69. நயன்  இந்த ஆண்டு 15.17 கோடி ரூபாய் வருமானமாக சம்பாதித்துள்ளார் என்று இந்தப் பட்டியலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.  

இந்த பட்டியலில் முதல் ஐந்து இடங்களை பிடித்திருப்பவர்கள் சல்மான்கான், விராட் கோலி, அக்ஷய்குமார், தீபிகா படுகோன், தோனி ஆவார்கள். இந்தப் பட்டியலில் இடம் பெற்றிருக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் ஏ.ஆர்.ரஹ்மான், நடிகர்களில் ரஜினி, விஜய், விக்ரம், சூர்யா, தனுஷ், நயன்தாரா, கமல்ஹாசன். பட்டியலில்,  ஏ.ஆர்.ரஹ்மானுக்கு  11-ஆவது இடமும், ரஜினிகாந்திற்கு  14-ஆவது இடமும், விஜய்க்கு 26-ஆவது இடமும், விக்ரமிற்கு 29-ஆவது இடமும், சூர்யாவுக்கு 34-ஆவது இடமும், தனுஷ்ஷிற்கு 53-ஆவது இடமும், நயன்தாராவுக்கு 69-ஆவது இடமும், கமலுக்கு 71-ஆவது இடமும் கிடைத்துள்ளது.

இந்தப் பட்டியலில் முதல் நூறு பேர் பட்டியலில் இதர தமிழ்ப்பட நடிகைகள் யாரும் இடம் பெறவில்லை. இப்ப சொல்லுங்கள்  நயன்தாரா  பெண் சூப்பர் ஸ்டாரா இல்லையா?

- சுதந்திரன்

Tags : Nayanthara Forbes Kollywood Lady super star நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டார் நயன் கோலிவுட்

More from the section

திரைப்பட தேசிய விருதுகள்: புதிய அறிவிப்பு!
விரைவில் தொடங்கவுள்ள ஹிந்தி ‘சேது 2’!
களவாணி 2 பட உரிமை என்னிடமே உள்ளது: விமல், இயக்குநர் சற்குணம் மீது புகார் கூறும் தயாரிப்பாளர்
விஜய் 63 படப்பிடிப்பில் விபத்து: காயமடைந்தவரை நேரில் விசாரித்த விஜய்! (விடியோ)
டிக் டாக்கைத் தடை செய்வதா?: நடிகை கஸ்தூரி எதிர்ப்பு!