வெள்ளிக்கிழமை 22 மார்ச் 2019

'பேட்ட' வசூல் விபரங்களை நீங்கள் எப்படி சொல்கிறீர்கள்? சர்ச்சைக்கு திரி கிள்ளியுள்ள சன் பிக்சர்ஸ் ட்வீட் 

DIN | Published: 15th January 2019 07:32 PM

 

சென்னை: 'பேட்ட' வசூல் விபரங்களை நீங்கள் எப்படி சொல்கிறீர்கள்? என்று பாக்ஸ் ஆபிஸ் ட்ராக்கர்களை நோக்கி சன் பிக்சர்ஸ் செய்துள்ள ட்வீட் சர்ச்சைக்கு திரி கிள்ளியுள்ளது.

பொங்கலை முன்னிட்டு ஜனவரி 10-ம் தேதி ரஜினியின் 'பேட்ட' மற்றும் அஜித்தின் 'விசுவாசம்    ஆகியோரின் படங்கள் முதல் முறையாக  ஒரே தேதியில் வெளியாகியுள்ளன. இரண்டு படங்களுமே விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.  ஆனால் இரண்டில் எது வசூலில் வெற்றி என்பது குறித்து இணையத்தில் மாறுபட்ட கருத்துக்கள் நிலவி வருகின்றன.

பாக்ஸ் ஆபிஸ் ட்ராக்கர்கள் என்னும் சினிமா வசூல் விபர தொகுப்பாளர்கள் பலர் 'பேட்ட' படத்தை விட 'விஸ்வாசம்' படத்தின் வசூல் தான் தமிழகத்தில் அதிகம் என்று பலரும் ட்வீட் செய்து வந்தனர். இதனை முன்வைத்து அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களி கொண்டாடி வந்தார்கள். 

இந்நிலையில் 'பேட்ட' வசூல் விபரங்களை நீங்கள் எப்படி சொல்கிறீர்கள்? என்று பாக்ஸ் ஆபிஸ் ட்ராக்கர்களை நோக்கி சன் பிக்சர்ஸ் செய்துள்ள ட்வீட் சர்ச்சைக்கு திரி கிள்ளியுள்ளது.

இதுதொடர்பாக சன் பிக்சர்ஸ் நிறுவன ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

பாக்ஸ் ஆஃபீஸ் ஹிட்டை ட்ராக் செய்யும் நண்பர்களே, நீங்கள் எப்படி இவ்வளவு உறுதியாக பேட்ட படத்தின் பாக்ஸ் ஆஃபீஸ் வசூல் விபரங்களைக் கூறுகிறீர்கள் என்பது எங்களுக்குப் புரியவில்லை. ஏனெனில் தமிழகம் முழுவதும் உள்ள 600-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் இருந்து எங்களுக்கே இன்னும் அதிகாரபூர்வ தகவல் வரவில்லையே. ரசிகர்களே இந்த பொங்கலை உங்கள் விருப்பமான ஹீரோக்களோடு கொண்டாடுங்கள் தவறான சித்தரிப்புகளுக்கு பலியாகி விடாதீர்கள்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த ட்வீட்டுக்கு பதில் அளிக்கும் விதமாக படத்தின் வசூல் நிலவரத்தை வெளியிட்டவர்கள் ட்விட்டரில் பதிலடி கொடுத்து வருகிறார்கள். குறிப்பாக உங்கள் முந்தைய தயாரிப்பான 'சர்கார்' படத்தின் வசூல் நிலவரத்தை வெளியிட்ட போது, எங்களுடைய ட்வீட்டை ரீ-ட்வீட் செய்து கொண்டாடினீர்கள். இப்போது மட்டும் ஏன் இப்படி? என்று அவர்கள் எதிர் கேள்வி கேட்டு மடக்கி வருகின்றனர். 

Tags : tamilnadu kollywood Rajinikanth ajith kumar diwali collection box office trackers sun pictures tweet controversy

More from the section

விஜய் - அட்லி படத்தில் இணைந்துள்ள பிரபல பாலிவுட் நடிகர்!
விஜய் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் நடித்துள்ள வாட்ச்மேன் பட டிரெய்லர்!
‘பிஎம் நரேந்திர மோடி’ படம்: டிரெய்லர் வெளியீடு!
விக்னேஷ் சிவன் இயக்கும் சிவகார்த்திகேயன் படம்: அதிகாரபூர்வ அறிவிப்பு!
வெளியானது நயன்தாராவின் 'ஐரா' ட்ரைலர்