வெள்ளிக்கிழமை 22 பிப்ரவரி 2019

தனுஷின் 'ரவுடி பேபி' பாடலைப் பாராட்டி வாங்கிக் கட்டிக் கொண்ட நடிகை 

DIN | Published: 22nd January 2019 04:34 PM

 

பெங்களூரு: மாரி -2 படத்தில் இடம்பெற்ற தனுஷின் 'ரவுடி பேபி' பாடலைப் பாராட்டிய தனுஷின் முன்னாள்  நாயகியான திவ்யா ஸ்பந்தனாவை கன்னட ரசிகர்கள் கடுமையாக விமர்சித்துள்ளார்கள் 

தனுஷ், சாய் பல்லவி கூட்டணியில் பாலாஜி மோகன் இயக்கத்தில் வெளியான படம் மாரி - 2. படம் வசூல் ரீதியாக சரியாகப் போகாவிட்டாலும்,யுவன் ஷங்கர் ராஜா இசையில் இந்த படத்தில் இடம்பெற்ற ‘ரவுடி பேபி’ என்ற பாடல் வைரல் ஹிட்டானது. இதுவரை இப்பாடலை உலகம் முழுவதும் 10 கோடி பேர் பார்த்துள்ளனர். 

இதனை தனுஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார். இதற்கு பல கோலிவுட் நடிகர், நடிகைகள் பலர் பாராட்டு தெரிவித்து அதனை 'ரி ட்வீட்' செய்திருந்தனர். 

இந்நிலையில் 'ரவுடி பேபி' பாடலைப் பாராட்டிய தனுஷின் முன்னாள் நாயகியான திவ்யா ஸ்பந்தனாவை கன்னட ரசிகர்கள் கடுமையாக விமர்சித்துள்ளார்கள் 

தனுஷுடன் 'பொல்லாதவன்' படத்தில் இணைந்து நடித்தவர் நடிகை திவ்யா ஸ்பந்தனா (எ) ரம்யா. இவர் தற்போதுகாங்கிரஸ் கட்சியில் இணைந்து தீவிரமாகி செயல்பட்டு வருகிறார். 

'ரவுடி பேபி' பாடலைப் பாராட்டும் விதமாக நடிகை ரம்யா, தனுசையும் யுவன் ஷங்கர் ராஜாவையும் குறிப்பிட்டு இரண்டு ரவுடிகளுக்கும் வாழ்த்துக்கள் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டினார்.

இதற்கு கன்னட ரசிகர்கள் அவருக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். “கன்னடத்தில் எத்தனையோ படங்கள் வருகின்றன. ஆனால் அதையெல்லாம் பாராட்டாமல் தனுசை பாராட்டிய உங்கள் தமிழ் பாசத்துக்கு நன்றி. 

யஷ் நடித்துள்ள கே.ஜி.எப் கன்னட படம் பாகிஸ்தானில் கூட வெளியாகி உள்ளது. இந்த படம் ரூ.250 கோடி வசூலித்து சாதனை செய்துள்ளது உள்ளது. இதை ஏன் நீங்கள் பாராட்டவில்லை?. 

அடுத்த முறை தமிழ் நாட்டில் போட்டியிடுங்கள். கர்நாடகாவில் உங்களுக்கு ஒரு ஓட்டு கூட கிடைக்காது.

இவ்வாறெல்லாம் அவரை சமூக வலைத்தளத்தில் கன்னட ரசிகர்கள் கண்டித்துள்ளனர்.  

Tags : dhanush maari-2 rowdy baby divya spandana twitter wish controversy

More from the section

செழியனின் ‘டு லெட்’ - திரை விமரிசனம்
நடிகையின் கட்செவி கணக்கில் தகவல் திருட்டு: சைபர் குற்றப்பிரிவு விசாரணை
ஹிந்தி திரைப்பட தயாரிப்பாளர் ராஜ்குமார் பர்ஜாத்யா மறைவு
நடிக்க வந்த 10 ஆண்டுகளில் நிறைய கற்றுக் கொண்டேன்! நடிகை பிரியா ஆனந்த் பேட்டி! (விடியோ)
மீ டூ புகார்: மெளனம் கலைத்தார் பாடகர் கார்த்திக்!