சனிக்கிழமை 23 பிப்ரவரி 2019

அம்மாவுக்கு புடவை வாங்கிக்கொடுங்க-அன்று! அண்டாவில் பால் ஊற்றுங்கள்-இன்று! சிம்பு உளறல்

By சினேகா| DIN | Published: 22nd January 2019 04:08 PM

 

பொங்கல் ரிலீஸாக 'பேட்ட' மற்றும் விஸ்வாசம் ஆகிய படங்கள் வெளிவந்தது. ரசிகர்களின் பேராதரவுடன் இப்படங்கள் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்க, அண்மையில் விஸ்வாசம் படத்தின் கட்-அவுட் சரிந்து விழுந்து, அஜித் ரசிகர்கள் காயம் அடைந்தனர். இந்தச் செய்தி இணையத்தில் வைரலானது. 

இந்நிலையில் சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு, மேகா ஆகாஷ், கத்ரீன் தெரசா, உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'வந்தா ராஜாவா தான் வருவேன்'. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் பிப்ரவரி 1-ம் தேதி ரிலிஸாகவிருக்கிறது. இதையொட்டி திரையில் தல ரசிகராக வலம் வரும் சிம்பு, ஒரு பகீர் விடியோவை வெளியிட்டார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளது, 'என்னுடைய ஃபேன்ஸ்குக்கு ஒரு ரிக்வெஸ்ட் - பொதுவா ஒரு ஸ்டாரோட படம் ரிலீஸ் ஆகும் போது, சில இடங்களில் டிக்கெட் ரேட் அதிகமாக இருக்கும்...எக்ஸ்ட்ராவா காசு கொடுத்து பார்க்காதீங்க - கெளண்டர்ல டிக்கெட் ரேட் என்னவோ அதைக் கொடுத்து வாங்குங்க...என் படம் ரிலீஸ் ஆகும் போது ஒரு ப்ளெக்ஸ் வைக்கறது, ஒரு பால் அபிசேஷம் பண்றது...இது எல்லாம் ஏதோ ஒரு விதத்துல செலவு பண்ணி என் மேல இருக்கற அன்பை காட்டத்தான் போறீங்க...இந்த ஒரு வாட்டி அதெல்லாம் பண்ணாதீங்க...உங்க அப்பா அம்மாதான் உங்களுக்கு எல்லாமே, இந்த வாட்டி பால் அபிசேஷம் பேனருக்கு பதிலா, உங்க அம்மாவுக்கு ஒரு புடவை, உங்க அப்பாவுக்கு ஒரு சட்டை, உங்க தம்பி தங்கைக்கு சாக்லெட் வாங்கி குடுங்க..ஏதோ ஒண்ணு உங்களால முடிஞ்சது, உங்க தாய்க்கு குடுக்கற ஒரு ஃபோட்டோ அல்லது விடியோவா அதை போட்டீங்கன்னா அதைவிட சந்தோஷம் எனக்கு வேற எதுவும் கிடையாது. இந்த பேனர் கட் அவுட் வைச்சுதான் மாஸ் கெத் காட்றது முக்கியம்னு கிடையாது. படத்துல நல்லா நடிச்சு உங்க பேரை நான் காப்பாத்தணும். அதை நான் செய்யறேன். எனக்காக நீங்க இதை செய்யுங்க. இது என் ரிக்வெஸ்ட். லவ்யூ ஆல். நீங்க இல்லாமா நான் இல்லை’ என்று தன் புத்தாண்டு பொங்கல் வாழ்த்துக்களுடன் இந்த விடியோவை பதிவிட்டிருந்தார் சிம்பு.

இணையத்தில் இந்த விடியோவை கிண்டலடித்துப் பல பதிவுகள் வெளிவரவே கடுப்பான சிம்பு, முதல் வெளியிட்ட விடியோவுக்கு நேர் எதிராக இன்னொரு விடியோவை தற்போது வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசியது, ‘ஒரு விடியோ ஒன்று விட்டு இருந்தேன்...சில விஷயங்கள் பண்ணாதீங்க இதைப் பண்ணுங்கன்னு சொல்லி இருந்தேன். பட் என்னென்ன எனக்குப் போய் அந்தளவு ஃபேன்ஸ் இருக்காங்கா, எனக்கு இருக்கறதே 2 - 3 ரசிகர்கள் தான்னு சொல்றாங்க. இப்ப நான் உன்கிட்ட சொல்றேன். நாம ஒரு தப்பு செஞ்சா, அதை திருத்திக்கணும், அந்த ரெண்டு மூணு ரசிகர்கள்தானே இருக்காங்கறப்ப ஏன் இதெல்லாம் பேசணும். அந்த 2 - 3 பேர் கிட்ட மட்டும் சொல்றேன், இது என்னோட அன்பு கட்டளை. இதுவரைக்கும் நீங்க வைக்காத அளவுக்கு ப்ளக்ஸ் வைக்கறீங்க, கட் அவுட் வைக்கறீங்க, பால் எல்லாம் பாக்கெட்ல ஊத்தாதீங்க. அண்டாவில ஊத்துங்க. வேற லெவல்ல செய்யறீங்க. இதை தான் நான் உங்ககிட்ட எதிர்ப்பார்க்கிறேன், எனக்கு தான் 2-3 ரசிகர்கள் தானே இருக்காங்க. அதனால இதைச் செய்றது தப்பு கிடையாது. அந்தளவு நான் பெரிய ஆளும் கிடையாது, யாரும் கேள்வியும் கேட்க போறது கிடையாது. வந்தா ராஜாவா தான் வருவேன் ரிலீஸுக்கு வேற லெவல்ல செய்யுங்க இதை நான் உங்களுக்கு சொல்றேன்’ என்று புதிய விடியோவை வெளியிட்டுள்ளார்.

இந்த விடியோவை பார்த்த நெட்டிசன்கள் இதென்ன கலாட்டா என்று புது மீம்ஸ்களை உருவாக்கி வருகிறார்கள். முதல் விடியோவே மொக்கை அதற்கு மாற்றாக வெளியிடப்பட்ட இரண்டாவது மரண மொக்கை என்று கலாய்த்து வருகிறார்கள். மூன்றாவது விடியோவை எப்போது ரிலீஸ் செய்வார் (படம் இல்லீங்க!) என்றும் சிலர் ஆவலாக எதிர்ப்பார்த்துள்ளனர்!? 

இந்த நிலையில் சிம்பு ரசிகர்கள் உண்மையில் அவரது கட் அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்யவிருக்கிறார்களா என்பதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும். (பிப்ரவரியில் வந்தால் ராஜாவாதான் வருவாரா?)

Tags : simbu சிம்பு விடியோ video of simbu memes simbu வந்தா ராஜாவா தான் வருவேன்

More from the section

பிரபல இயக்குநர் ரூ. 10 லட்சம் அளிக்க முன்வந்தும் பாடல் வரிகளைத் தர மறுத்த கவிஞர் வைரமுத்து!
என் டி ஆருக்கு ஒருவேளை உணவு தராமல் புறக்கணித்தவர்கள் தான் அவரது மகன்கள்: பத்திரிகையாளர் பரபரப்பு புகார்!
15 வருடங்களுக்குப் பிறகு தமிழில் மீண்டும் நடிக்கவுள்ள அஜித் பட நாயகி!
விஜய் சேதுபதி நடித்துள்ள சூப்பர் டீலக்ஸ் பட டிரெய்லர் வெளியீடு!
பிரபல தெலுங்கு இயக்குநர் கோடி ராமகிருஷ்ணா காலமானார்