வியாழக்கிழமை 18 ஜூலை 2019

மருத்துவரை மணந்தார் இயக்குநர் விஜய்

By எழில்| DIN | Published: 12th July 2019 03:18 PM

 

ஐஸ்வர்யா என்கிற மருத்துவரைத் திருமணம் செய்துள்ளார் இயக்குநர் விஜய்.

சமீபத்தில் தனது திருமணம் குறித்து அறிக்கை வெளியிட்ட விஜய், நேற்று நடைபெற்ற திருமணத்தில் மருத்துவர் ஐஸ்வர்யாவை மணந்துள்ளார். இத்திருமணத்தில் நெருங்கிய உறவினர்களும் நண்பர்களும் மட்டும் கலந்துகொண்டார்கள்.

இது இயக்குநர் விஜய்யின் 2-வது திருமணம் ஆகும். 2014-ல் நடிகை அமலா பாலை இயக்குநர் விஜய் திருமண செய்த நிலையில் இருவரும் 2017-ல் விவகாரத்து செய்துகொண்டார்கள்.

இந்த வருடம் வாட்ச்மேன், தேவி 2 என விஜய் இயக்கிய இரு படங்கள் வெளியாகியுள்ளன. அடுத்ததாக மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தை விஜய் இயக்கவுள்ளார். ஜெயலலிதா வேடத்தில் கங்கனா நடிக்கவுள்ளார். 

More from the section

பத்தொன்பது ஆண்டுகளுக்குப் பின்னால் இணையும் கமல் -  ஏ.ஆர் ரஹ்மான் 
சந்தானம் நடித்துள்ள ஏ1 படத்தின் டீசர் வெளியீடு!
கல்விச்சூழலில் மிக முக்கியமான கேள்வியை எழுப்பியுள்ளார்: சூர்யாவிற்கு இயக்குநர் பா.இரஞ்சித் ஆதரவு 
நேர்கொண்ட பார்வை: தணிக்கையில் யு/ஏ சான்றிதழ்!
காப்பான் பாடல் வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ளும் ரஜினி, ஷங்கர்!