சனிக்கிழமை 23 பிப்ரவரி 2019

லாஸ் வேகாஸில் விக்னேஷ் சிவனுடன் புத்தாண்டை கொண்டாடிய நயன்தாரா! வைரல் புகைப்படங்கள்!

By சினேகா| DIN | Published: 02nd January 2019 11:48 AM

 

நடிகை நயன்தாராவுக்கு ஆண்கள் பெண்கள் மட்டுமல்லாது குழந்தைகள் கூட ரசிகர்களாகிவிடுவார்கள். அண்மையில் ஒரு படப்பிடிப்பின் போது சிறுமியொருத்தியை நயன் கொஞ்சி மகிழ்ந்த காணொளி இணையத்தில் வைரலாகியது. கடந்த வருட கிறிஸ்துமஸ் பண்டிகையை இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் நடிகை நயன்தாரா கொண்டாடிய புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகின. அந்தளவுக்கு நயன்தாராவை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவரது கோலமாவு கோகிலா, இமைக்கா நொடிகள் ஆகிய இரண்டு படங்களுக்கு அவருக்கு நல்ல பெயரையும் புகழையும் தேடித் தந்தன.

அடுத்து, நடிகர் அஜித்துடன் நயன்தாரா நடித்துள்ள விஸ்வாசம் படம் பொங்கல் வெளியீடாக திரைக்கு வெளிவரவிருக்கிறது. தற்போது நடிகர் விஜய்யுடன் ‘தளபதி 63’, ’சைரா நரசிம்மா ரெட்டி’, ‘லவ் ஆக்‌ஷன் டிராமா’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். பெயரிடப்படாத படங்களான இயக்குநர் அறிவழகனின் ஒரு படத்திலும், நடிகர் சிவகார்த்திகேயனுடன் ஒரு படத்திலும் நடித்து வருகிறார் நயன். மேலும், பெண் மையக் கதாபாத்திரங்களை உள்ளடக்கிய படங்களான, ‘ஐரா’ ‘கொலையுதிர் காலம்’, போன்ற படங்களிலும் பரபரப்பாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் 2019 புத்தாண்டை கொண்டாடுவதற்காக தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் லாஸ் வேகாஸ் சென்றுள்ளார் நயன்தாரா. ‘நானும் ரவுடிதான்’ படத்தின் மூலம் இவர்களுக்குள் நட்பு தொடங்கி பின்னர் காதலாக மலர்ந்தது. இவர்கள் தங்கள் காதல் பற்றியோ திருமணம் பற்றியோ இதுவரை வெளிப்படையாக எதுவும் கூறியதில்லை. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒருவர் மீது மற்றவர் மிகுந்த அன்புடனும் அக்கறையுடன் இருந்து வருகின்றனர். ஒன்றாக பயணங்கள் மேற்கொள்வதிலிருந்து, பண்டிகைகளை கொண்டாடி மகிழ்வது வரையிலும் அவர்களது அன்பு தொடர்கிறது. லாஸ்வேகாஸ் இருவருக்கும் பிடித்த இடம் என்பதால் புத்தாண்டை மகிழ்ச்சியுடன் கொண்டாடிய புகைப்படங்களை தங்கள் டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.

இருவரது ரசிகர்களும் இந்த ஆண்டு இந்த ஜோடியின் திருமணம் இருக்கலாம் என்று எதிர்பார்க்கின்றனர்.