புதன்கிழமை 20 மார்ச் 2019

யாஷிகா ஆனந்த் செம கூல்! வியக்கும் ஃபோட்டோகிராபர் அனிதா தேவியுடன் ஒரு நேர்காணல் (விடியோ)

By உமா ஷக்தி| Published: 21st November 2018 05:00 PM

புகைப்படக் கலை என்பது அனைவரும் விரும்பும் ஒன்று. நம் வாழ்க்கையின் அந்த நொடியை உறைய வைக்கும் ஒரு அழகிய கலை அது எனலாம். கருப்பு வெள்ளையில் தொடங்கி, இன்றைய காலகட்டம் வரை அதன் வளர்ச்சி அபாரமானது. தற்போது ஸ்மார்ட்ஃபோன் போன்ற நவீன வசதிகள் பெருகிவிட்ட நிலையில், அனைவரும் புகைப்படம் எடுப்பதில் தேர்ந்துவிட்டோம். ஆனாலும் ஃபோட்டோகிராபர் எனும் தொழிலுக்கு எப்போதும் மதிப்புண்டு. 

நம் வீட்டு விசேஷங்களாக இருந்தாலும் சரி, பொது நிகழ்ச்சிகளுக்கும் சரி, அனுபவமிக்க புகைப்படக் கலைஞர்கள் தேவை. ஒரு DSLR கேமராவில், தேவைப்படும் லென்ஸ் பயன்படுத்தி எடுக்கப்படும் புகைப்படங்கள் அதற்குரிய தெளிவோடும் அழகியலுடனும் இருக்கும் என்பது நிச்சயம். 

நுட்பத்துடனும் அழகியலுடனும் ஒரு புகைப்படத்தை எடுப்பவர்களை ஒளி ஓவியர் என்று குறிப்பிடலாம். காரணம் ஒளியைப் பயன்படுத்தி அவர்கள் செய்யும் வித்தைகளை ரசிக்க காணக் கண் கோடி வேண்டும். அது இயற்கைக் காட்சிகளாக இருந்தாலும் சரி, குழந்தைகளின் புகைப்படங்களாகட்டும், சிறப்பாக எடுக்கப்படும் புகைப்படங்களை ரசிக்க நாம் என்றுமே விரும்புவோம்.

அத்தகைய ஒரு புகைப்பட நிபுணர் தான் அனிதா தேவி. பத்திரிகையில் ஃபோட்டோகிராபராகத் தன் பணியைத் தொடங்கியவர், பின்பு திருமணங்களுக்கு புகைப்படம் எடுத்து அதில் தனித்தன்மையுடன் விளங்கினார். தற்போது அவரது கவனம் ஃபேஷன் துறையில் பதிந்துள்ளது. விளம்பரங்களுக்கு புகைப்படம் எடுப்பது முதல் மாடல்களை வைத்து ஃபோட்டோ ஷூட் செய்வது வரை ட்ரெண்டியான விஷயங்கள் செய்ய அவருக்கு விருப்பம் உண்டு. அவர் அண்மையில் எடுத்த புகைப்படங்கள் சில:

சந்தோஷ் நாராயணன்

**

யாஷிகா ஆனந்த்

**

ஹரீஷ் கல்யாண்

{pagination-pagination}

அனிதா ஃபோட்டோகிராபி என்ற நிறுவனத்தைத் துவங்கி வெற்றிகரமாக இயங்கி வருகிறார். தினமணி டாட் காம் வழங்கும் சந்திப்போமா நிகழ்ச்சியில் இந்த இளம் புகைப்படக் கலைஞரை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைந்தோம். இந்த விடியோவில் அவர் பகிர்ந்துள்ள விஷயங்கள் முக்கியமானவை. அது அடுத்தடுத்து இத்துறையில் கால் பதிக்க விரும்பும் இளைஞர்களுக்கு உதவும்.

அனிதாவின் முழுமையான நேர்காணல் இதோ

 

 

 

Tags : புகைப்படம் anitha அனிதா Photographer ஃபோட்டோகிராபர்

More from the section

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் நடத்தும் தி கிராண்ட் 3.0 பிரம்மாண்ட 3 இன் 1 கண்காட்சி!
ஈயத்தைப் பார்த்து இளித்ததாம் பித்தளை! சந்தர்ப்பவாத கூட்டணிகளின் வரலாறு
18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அதிமுக ஆட்சிக்கு வாழ்வா? சாவா? 
கொங்கு மாவட்டங்களில் போட்டியிடாத திமுக, பொள்ளாச்சியில் மட்டும் போட்டியிடுவது ஏன்?
100 நாட்கள் சாப்பிடாமல் இருந்த இந்தியர்! எப்படி சாத்தியமானது? நாஸா வெளியிட்டுள்ள ஆய்வு முடிவுகள்!