24 மார்ச் 2019

இந்தியாவில் மனிதத்தன்மையற்ற இந்தச் செயல் அழித்தொழிக்கப்பட வேண்டும்!

By - ரெனி ஜேக்கப்| Published: 11th February 2019 10:59 AM

 வரலாற்றுப் பின்னணி

சுதந்திரம் அடைந்து 71 ஆண்டுகள் ஆகி விட்டன. ஆனாலும், கொத்தடிமை முறை இன்னமும் நாட்டில் நீடித்து நமது சமூகத்தின் கெடுக்கிறது.

இந்தியாவில் கொத்தடிமை உழைப்பு பற்றிய பிரச்னை, 1975-ம் வருடம் தேசிய அளவில் பேசப்படுவதாக  மாறியது. ‘நாட்டை மறுநிர்மாணம் செய்வதற்கான திட்டம்’ என்று மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட ‘20 அம்சத் திட்டத்தில்’  நான்காவது அம்சமாக 1975-ல் அது காணப்பட்டது. ‘கொத்தடிமை முறை முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும். கொத்தடிமை முறை நிலவுகிற இடத்தில் எல்லாம் அது சட்ட விரோதம் என்று பிரகடனப்படுத்தப்படும்’ என்று அதில் இருந்தது

அதன் தொடர்ச்சியாக, அடுத்த ஆண்டிலேயே ‘கொத்தடிமை உழைப்பு முறைமை ஒழிப்புச் சட்டம்- 1976’ எனும் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. தீவிரமான முறையில் இந்தப் பிரச்னையை எதிர்கொள்ள வேண்டும் என்றும் திட்டமிடப்பட்டது. மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட குடிமக்களுக்கு சுதந்திரத்தையும் அவர்கள் விரும்பியபடி வாழ்வதற்கான விடுதலையையும் பெற்றுத் தருவதற்கான சட்டமாக அது இருந்தது.

இருந்தாலும், இந்திய மக்களின் சமூக, பொருளாதார மாற்றங்களோடு வருடங்கள் பல கழிந்துவிட்டன. கொத்தடிமை உழைப்பும் புதிய வடிவங்களை எடுத்திருக்கிறது. 20 அம்சத் திட்டம் மாற்றியமைக்கப்பட்ட போது, மத்திய அரசின் கவனத்திலிருந்து அது நழுவியது. அதற்குப் பிறகு மத்திய அரசின் முன்னுரிமைப் பிரச்சினையாக அது இல்லை. சுரண்டுகிற வேலைச் சூழலில் ஆயிரக்கணக்கானோர் மாட்டிக் கொண்டிருக்கிற நிலையில், இன்னமும் கொத்தடிமை உழைப்பு முறைமை நடைமுறையில் இருப்பதற்கு இதுவே காரணம்.   

ஒவ்வொரு இந்தியரின் தனிநபர் சுதந்திரத்தை இந்திய அரசியல் சாசனத்தில் பொறிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள், உயர்த்திப் பிடிக்கின்றன. எந்த வகையிலான கடத்தல் வடிவத்திலும் சிக்கிவிடாமல் இந்தியர்களை அவை பாதுகாக்கின்றன. அரசியல் சாசனத்தில் பொறிக்கப்பட்டிருக்கிற அந்த அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும். அதற்கு எந்த ஆபத்தும் வராமல் காக்க வேண்டும். 

எந்தவொரு மனிதரின் வாழ்வையும் தனிநபர் சுதந்திரத்தையும் சட்டரீதியான வகையைத் தவிர்த்து, வேறு எந்த வகையிலும் நலிந்து போகுமாறு செய்யக் கூடாது என்கிறது இந்திய அரசியல் சாசனத்தின் 21-வது சட்டக்கூறு. 

மனிதர்களைக் கடத்துதலும் கூலி தராமல் கட்டாயப்படுத்தி வேலை வாங்குகிறதும், மற்றும் பேகர் என்று அழைக்கப்படும் முறையும், இத்தகைய பல்வேறு வகையான கட்டாய உழைப்பு வடிவங்களும் தடை செய்யப்படுகின்றன. இதை மீறுகிற எதுவும் சட்டப்படி தண்டிக்க வேண்டிய குற்றம் ஆகும் என்கிறது அரசியல் சாசனத்தின் சட்டக்கூறு 23.                                           

கொத்தடிமை உழைப்பு பற்றிய வரையறையும் விளக்கமும்

கொத்தடிமை உழைப்பு என்பது கட்டாயப்படுத்தி ஒடுக்கப்படும்  உழைப்பின் கொடூரமான வடிவம்.

கடன் காரணமாகவோ, பரம்பரை பழக்கம் காரணமாகவோ, சாதி அடிப்படையிலோ, பொருளாதாரரீதியாகவோ கட்டாய உழைப்பில் ஒரு தொழிலாளி சிக்கிக்கொண்டு, இந்திய அரசியல் சாசனத்தில் உறுதி செய்யப்பட்டிருக்கிற, தனக்கான அடிப்படை உரிமைகளையும் சுதந்திரங்களையும் இழந்துவிடுகிற ஒடுக்குமுறை வடிவம் இது.

தனக்கு வேலை தருபவரிடமிருந்து ஒரு சிறு தொகையை முன்பணமாக பெறுகிற கொத்தடிமை, தனது வேலை தொடர்பான சுதந்திரத்தை இழக்கிறார்.

இந்தியா முழுவதும் தங்கு தடையில்லாமல் பயணம் செய்வதற்கான தனது உரிமையை இழக்கிறார். தனது வேலைக்குக் குறைந்தபட்ச சட்டக் கூலி பெறுவதற்கான உரிமை, தனது பொருள்களையும் சேவைகளையும் சந்தை விலைக்கு விற்கிற  உரிமை ஆகியவற்றையையும் இழக்கிறார்.

உடல்ரீதியாக வன்முறைத் தாக்குலுக்கு ஆளாக்குவது, வார்த்தைரீதியாக இழிவுபடுத்துவது, மிருகத்தனமான வன்முறை, பாலியல்ரீதியான துன்புறுத்தல் ஆகியவை கொத்தடிமை உழைப்பில் சிக்கிக் கொண்டோர் மீது நடத்தப்படும் பொதுவான குற்றங்கள். இவைதான் கடுமையான மனித உரிமைக் குற்றமாக கொத்தடிமை உழைப்பை ஆக்கியிருக்கின்றன.

கொத்தடிமை உழைப்பு என்பது மனிதக் கடத்தலின் ஒரு வடிவம் என்கிறது மத்திய அரசின் உள்துறை அமைச்சகம்.

கொத்தடிமை உழைப்பு முறைமை என்பது மறைமுகமானது. இந்தியப் பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளில் இன்னமும் அது நீடிக்கிறது.அது இன்னமும் ஒழிக்கப்படவில்லை. 

சமூகத்தில் புறக்கணிக்கப்பட்டவர்களின் பொருளாதாரரீதியான நலிவு நிலைமையைப் பயன்படுத்தித்தான் கொத்தடிமை முறைமை உயிர்வாழ்கிறது. லாபத்துக்காக அவர்களை அது சுரண்டுகிறது. இந்த சுரண்டல் நடைமுறையை நாங்கள் இனியும் பொறுத்து கொள்ள மாட்டோம்.

இந்தியாவில் 90 சதவீதமான ஆள் கடத்தல்கள் உள்நாட்டில்தான் நடைபெறுகின்றன. அதில் அதிகமாக பாதிக்கப்படுவோர் சமூகத்தில் மிகவும் ஒடுக்கப்பட்ட நிலையில் வாழ்கிற தலித் சாதிகள், பழங்குடி சமூகங்கள், பெண்கள், குழந்தைகள், இடம்பெயர்ந்து வேலை செய்யும் தொழிலாளர்கள் ஆகியோர்தான்.

ஆள்கடத்தலால் பாதிக்கப்பட்டோரில் 2016-ம் வருடத்தில் காப்பாற்றப்பட்டவர்கள் 23,117 பேர். அவர்களில் பெரும்பான்மையோர் (10509 பேர்) கட்டாய உழைப்பு மூலமாக சுரண்டப்பட்டவர்கள் என்கிறது தேசிய குற்ற ஆவண காப்பகம். 

 பரிந்துரைகள்

இந்தியாவின் உழைப்பாளர்களில் 94 சதவீதமாக இருக்கிற அமைப்பு சாரா தொழிலாளர்களைப் பாதுகாப்பதற்கு இது மிகவும் அவசியமானது. அதனால், நாங்கள் 2019 அறிக்கையில் பின்வரும் அம்சங்களை இணைத்து கொள்ள வேண்டும் என்று கோருகிறோம்.

Tags : slave cenral govt bondage கொத்தடிமை உழைப்பு சுரண்டல் அடிமை

More from the section

பெண்களுக்கு எட்டாத உயரத்தில் தொடர்ந்து நீடிக்கும் தமிழக அரசியல் ஏணி!
Mr. ரஜினி, Mr. மு.க. அழகிரி எங்கே இருக்கீங்க.. களத்துல இறங்கி குரல் கொடுங்க!
அலுவலக ஆண்களை, பெண்கள் நெருங்கிய உறவுகளாகப் பாவிக்க வேண்டிய அவசியமில்லை: திலகவதி ஐபிஎஸ்! 
பொள்ளாச்சி சம்பவத்துக்கு காரணம் என்ன? திலகவதி ஐபிஎஸ் அதிர்ச்சித் தகவல்
கோடை காலத்துக்காக இல்லை என்றால் கூட தேர்தலுக்காகவாவது இதை செய்யுமா மாநில அரசு?