24 பிப்ரவரி 2019

விண்ணப்பத்துவிட்டீர்களா..? பொதுத்துறை வங்கியில் அதிகாரி வேலைக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி  

Published: 30th August 2018 01:23 PM


பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான கனரா வங்கியின் வீட்டு வசதி நிதி நிறுவனமாக கேன்பின் ஹோம்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள 25 புரொபேஷனரி அதிகாரி பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாகும். இதுவரை விண்ணப்பிக்க மறந்தாவர்கள் உடனே விண்ணப்பித்து பயன்பெறவும். 

பதவி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

பதவி: AGM – Finance & Accounts - 01 
வயதுவரம்பு: 28 முதல் 40க்குள் இருக்க வேண்டும். 

பதவி: Senior Manager – Legal - 02 
வயதுவரம்பு: 25 முதல் 35க்குள் இருக்க வேண்டும். 

பதவி: Probationary officer - 25 
வயதுவரம்பு: 21 முதல் 30க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக ஏதாவதொரு துறையில் இளங்கலை, முதுகலை, சட்டம், சிஏ முடித்தவர்கள், பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். கணினியில் திறனும் இருசக்கர வாகன ஓட்டுநர் திறனும் பெற்றிருக்க வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஏதாவது ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியிலிருந்து CAN FIN HOMES LTD -OD No. 2636261000147, Canara Bank, Prime Corporate Branch, Bangalore (IFSC Code No. CNRB0002636) என்ற பெயரில் நெப்ட்,நெட் பேங்கிங் முறையில் செலுத்த வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: www.canfinhomes.com அல்லது http://www.canfinhomes.com/job என்ற வலைத்தளத்தின் மூலம் ஆன்லைன் முலம் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.08.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.canfinhomes.com/Announcements/180821193010_Notification%20of%20AGM%20F&A.pdf என்ற வலைத்தள லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

More from the section

ரூ.62 ஆயிரம் சம்பளத்தில் நீதிமன்றத்தில் வேலை வேண்டுமா? 
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்ககத்தில் வேலை வேண்டுமா? 
இளைஞர்களே... ரயில்வேயில் 1,30,000 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு: வாய்ப்பை மிஸ்பண்ணிடாதீங்க..!
விண்ணப்பித்துவிட்டீர்களா..? உணவு தரநிர்ணய கழகத்தில் வேலை..!
ரூ.37 ஆயிரம் சம்பளத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை!