சனிக்கிழமை 23 பிப்ரவரி 2019

பொறியியல் பட்டதாரிகளுக்கான 'கேட் 2019' தேர்வு அறிவிப்பு

By ஆர்.வெங்கடேசன்| Published: 03rd September 2018 02:59 PM


பொறியியல் பட்டதாரிகளுக்கான அகில இந்திய அளவில் நடத்தப்படும் 'கேட்' (GATE-2019) தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஆன்- லைன் மூலம் செப்டம்பர் 21 -ஆம் தேதி வரை முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

நாடு முழுவதும் உள்ள ஐஐடி- க்கள், பொறியியல் -  தொழில்நுட்ப கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் முதுநிலை பொறியியல் படிப்புகளான எம்.இ., எம்.டெக். மற்றும் எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு 'கேட்' நுழைவுத் தேர்வு அடிப்படையிலும், அந்தந்த மாநிலங்களில் நடத்தப்படும் மாநில அளவிலான நுழைவுத் தேர்வு அடிப்படையில் நடத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தைப் பொருத்தவரை 'கேட்', 'டான்செட்' நுழைவுத் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் சேர்க்கை நடத்தப்படுகிறது.

அதுமட்டுமின்றி, பல பொதுத் துறை நிறுவனங்கள் இந்தத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பணியாளர் தேர்வையும் நடத்துகின்றன.

பல தனியார் நிறுவனங்களும், கல்வி நிறுவனங்களும் இந்த தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கிறது. எனவே, வேலைவாய்ப்பை பெற்றுத் தரும் ஒரு தேர்வாகவும் இந்த தேர்வு மதிப்பு பெறுகிறது.

இந்த அகில இந்திய அளவிலான 'கேட்' தேர்வானது ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு ஐஐடி மூலம் நடத்தப்பட்டு வருகிறது. 2019- ஆம் ஆண்டுக்கான நுழைவுத் தேர்வை சென்னை ஐஐடி நடத்துகிறது.

தகுதி: பொறியியல் பட்டதாரிகள், தொழில்நுட்ப படிப்புகளில் பட்டப்படிப்பு மற்றும் முதுகலை முடித்தவர்கள் இந்த தேர்வை எழுதலாம். 4 ஆண்டுகளைக் கொண்ட அறிவியல் படிப்புகள், முதுகலை அறிவியல் படிப்பை முடித்தவர்கள் எழுதலாம்.

தேர்வு முறை: இணையதளம் வழியான கணினித் தேர்வு அடிப்படையில் இந்த தேர்வு நடைபெறும்.

கட்டணம்: இந்த தேர்வை எழுத விரும்பும் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள், பெண் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.750, மற்றவர்கள் ரூ.1500 கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு எப்போது? இந்தத் தேர்வானது கணினி வழியில் மட்டுமே நடத்தப்படும். 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி 2,3 மற்றும் 9,10 ஆகிய நான்கு தேதிகளில் தேர்வானது நடத்தப்பட உள்ளது.

இதற்கு விண்ணப்பத்தை www.gate.iitg.ac.in வலைத்தளத்தில் ஆன்- லைன் மூலம் பதிவு செய்யவேண்டும். ஆன்- லைன் பதிவு செப்டம்பர் 1 -ஆம் தேதி தொடங்கி நடைபெறுகிறது. பதிவு செய்ய செப்டம்பர் 21 கடைசித் தேதியாகும்.

வெளிநாட்டினருக்கு அனுமதி: 'கேட்' தேர்வில் வங்கதேசம், எத்தியோப்பியா, நேபால், சிங்கப்பூர், இலங்கை, ஐக்கிய அரபு நாடுகளைச் சேர்ந்த மாணவர்களும் பங்கேற்கலாம். இவர்களுக்காக அந்தந்த நாடுகளிலேயே தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதில் தகுதி பெறும் இந்த 6 நாடுகளைச் சேர்ந்த மாணவர்களும், இந்திய கல்வி நிறுவனங்களில் முதுநிலை பொறியியல் படிப்புகள், எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளில் சேர்ந்து படிக்க முடியும். 

மேலும் விவரங்களுக்கு https://drive.google.com/file/d/18tF_LQc_48eIs5YimeGfWsKy8cYPRkeW/view  என்ற இணையதளத்தைப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.

More from the section

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்கத்தில் வேலை வேண்டுமா? 
இளைஞர்களே... ரயில்வேயில் 1,30,000 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு: வாய்ப்பை மிஸ்பண்ணிடாதீங்க..!
விண்ணப்பித்துவிட்டீர்களா..? உணவு தரநிர்ணய கழகத்தில் வேலை..!
ரூ.37 ஆயிரம் சம்பளத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை!
உயர்நீதிமன்றத்தில் கொட்டிக்கிடக்கும் சிஸ்டம் அதிகாரி வேலை: அரிய வாய்ப்பை மிஸ்பண்ணிடாதீங்க..!