புதன்கிழமை 23 ஜனவரி 2019

வேலை.. வேலை... வேலை... பிளஸ் டூ தேர்ச்சி பெற்றவர்களுக்கு அஞ்சல் துறையில் வேலை

Published: 08th September 2018 04:16 PM


இந்திய அஞ்சல் துறையின் சென்னை பொது அஞ்சல் அலுவலகத்தில் நேரடி முறையில் நிரப்பப்பட உள்ள அஞ்சல் ஆயுள் காப்பீடு நேரடி முகவர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு பிளஸ் டூ தேர்ச்சி பெற்றவர்கள் வரும் 18-ஆம் தேதி நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்துகொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பணி: அஞ்சல் ஆயுள் காப்பீடு நேரடி முகவர் (Postal Insurance Direct Agent)

தகுதி: பிளஸ் டூ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வேலைவாய்ப்புக்காக காத்திருப்போர், சுய தொழில் புரிவோர், முன்னாள் ஆயுள் காப்பீட்டு ஆலோசகர் (முகவர்கள்), ஓய்வு பெற்ற மத்திய, மாநில ஊழியர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 18 முதல் 65 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

தபால் ஆயுள் காப்பீடு நேரடி முகவர் பணியில் சேர ஆர்வம் உள்ளவர்கள் மேற்கண்ட தேதியில் நடைபெறும் நேர்முகத் தேர்வுக்கு வரும்போது கல்வி சான்றிதழ், பிறந்த தேதிக்கு சான்றிதழ் நகல்கள் மற்றும் இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களுடன்  (சமீபத்தியது) நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளலாம்

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 18.09.2018 அன்று காலை 11 மணி முதல் நடைபெறும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: சென்னை பொது அஞ்சல் அலுவலகம், சென்னை - 600001

மேலும் விவரங்கள் அறிய 044 - 25244338 என்ற தொலைப்பேசி எண்ணில் வேலை நேரங்களில் தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம். 

More from the section

ரூ. 2 லட்சத்து 24 ஆயிரம் சம்பளத்தில் வேலை வேண்டுமா..? 
இளைஞர்களே வாய்ப்பு உங்களுக்குதான் நழுவவிடாதீர்கள்... உடனே விண்ணப்பிக்கவும்!
தேசிய விதைகள் கார்ப்பரேஷனில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..!
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் வேலை வேண்டுமா..? உடனே விண்ணப்பிக்கவும்!
ரேடியோகிராபி டெக்னீசியன் வேலை... யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?