புதன்கிழமை 16 ஜனவரி 2019

தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழகத்தில் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்

Published: 11th September 2018 01:17 PM


சென்னையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழத்தில் காலியாக உள்ள நிர்வாக பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 25 

பதவி: Assistant Registrar - 01 
வயதுவரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவதொரு துறையில் 55 சதவீத மதிப்பெண்களுடன் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பதவி: Superintendents - 09 
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்று 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பதவி: Office Assistants - 05 
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.
 
பதவி: Assistant - 01
பதவி: Junior Assistant cum Computer Operators - 06 
தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்று கம்பியூட்டர் அப்பிளிக்கேஷன் பிரிவில் முதுகலை டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். 
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும். 

பதவி: Drivers - 03 
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று முதல் உதவி சிகிச்சை சான்று பெற்றிருக்க வேண்டும். மேலும் 4 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, தொழிற்திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிள் பிரிவினருக்கு ரூ.250. இதனை The Registrar, Tamil Nadu Teachers Education University என்ற பெயரில் சென்னையில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.tnteu.ac.in என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து சுய சான்றொப்பம் செய்த தேவையான சான்றிதழ் நகல்கள், இரு பரிந்துரை கடிதங்கள், டி.டி இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
Registrar i/c, Tamil Nadu Teachers Education University, Chennai - 97

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 27.09.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.tnteu.ac.in அல்லது http://www.tnteu.ac.in/admin/file_storage/cms/2382228.pdf லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Tags : employment jobs TNTEU Recruitment Tamil Nadu Teachers Education University chennai Non Teaching Jobs தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழகம் வேலை

More from the section

சென்னை பல்கலைக்கழகத்தில் திட்ட உதவியாளர் வேலை
பி.இ பட்டதாரிகளுக்கு கடற்படையில் வேலை
பெல் நிறுவனத்தில் 229 தொழில் பழகுநர் பயிற்சி
வேலை... வேலை... வேலை... பெரம்பலூர் மாவட்ட நீதிமன்றத்தில் வேலை
விண்ணப்பித்துவிட்டீர்களா..? பொறியியல் பட்டதாரிகளுக்கு பிஎஸ்என்எல் நிறுவனத்தில் வேலை வாய்ப்புகள்!