சனிக்கிழமை 23 மார்ச் 2019

ரூ.37 ஆயிரம் சம்பளத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை!

Published: 21st February 2019 12:47 PM


தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் காஞ்சிபுரம் - திருவள்ளூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம் (ஆவின்) நிறுவனத்தில் காலியாக உள்ள மேலாளர் (பொறியாளர்) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து மார்ச் 3 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Mamager (Engg)

காலியிடங்கள்: 02

சம்பளம்: மாதம் ரூ.37,700

வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ருமெண்டேஷன், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன், ஆட்டோமொபைல், மெக்கானிக்கல் போன்ற பிரிவுகளில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பக்கட்டணம்: ரூ.250. இதனை "The General Manager, K.T.D.C.M.P.U. Ltd", என்ற பெயரில் சென்னையில் மாற்றத்தக்க வரையில் டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.aavinmilk.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் டி.டி மற்றும் தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களையும் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
The General Manager, K.T.D.C.M.P. Union Limited, 55, Guruvappa Street, Ayanavaram, Chennai - 600023.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://aavinmilk.com/hrkt130219.html என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 04.03.2019

More from the section

வேலை வேண்டுமா..? சென்னை தொழிலாளர் அரசுக் காப்பீட்டுக் கழகத்திற்கு விண்ணப்பிக்கவும்!
ரூ.2 லட்சம் சம்பளத்தில் வேலை வேண்டுமா..? அழைக்கிறது மத்திய பாஸ்போர்ட் நிறுவனம்..!
பட்டதாரிகளுக்கு உதவி மேலாளர் வேலைக்கு விண்ணப்பிக்கலாம்!
ரூ.1.40 லட்சம் சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை.! யாருக்குத் தெரியுமா?
வருமான வரித்துறையில் வேலை: யார் யார் விண்ணப்பிக்கலாம்?