சனிக்கிழமை 23 மார்ச் 2019

10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரிய வாய்ப்பு... ஓவர்மேன், சர்வேயர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்!

Published: 21st February 2019 11:01 AM


கொல்கத்தாவில் செயல்பட்டு வரும் செயில் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 72 ஓவர்மேன், சர்வேயர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

பணி: Overman
காலியிடங்கள்: 19
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் பொறியியல் துறையில் மைனிங்க் பிரிவில் 3 ஆண்டு டிப்ளமோ தேர்ச்சியுடன் DGMS-ல் வழங்கப்படும் Overmanship சான்று மற்றும் Gas Testing & First Aid சான்று பெற்று ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Mining Sirdar
காலியிடங்கள்: 52
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் DGMS-ல் வழங்கப்படும் Mining Sirdar's சான்று மற்றும் Gas Testing & First Aid சான்று பெற்று ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Surveyor
காலியிடங்கள்: 01
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Mining & Mine's Survey-ல் 3 ஆண்டு டிப்ளமோ தேர்ச்சியுடன் Surveyor's சான்று பெற்று ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 3 பணிகளுக்கு 18 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, தொழிற்திறன் தேர்வு மற்றும் டிரேடு தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

எழுத்துத் தேர்வு நடைபெறும் இடம்: ராஞ்சி

தொழிற்திறன் தேர்வு மற்றும் டிரேடு தேர்வில் கலந்துகொள்ளும் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரயில் கட்டணம் வழங்கப்படும். 

விண்ணப்பக் கட்டணம்: Mining Sirdar பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் ரூ.150, இதர பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் ரூ.250 கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை: www.sail.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும். 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.sail.co.in  என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 10.03.2019

More from the section

வேலை வேண்டுமா..? சென்னை தொழிலாளர் அரசுக் காப்பீட்டுக் கழகத்திற்கு விண்ணப்பிக்கவும்!
ரூ.2 லட்சம் சம்பளத்தில் வேலை வேண்டுமா..? அழைக்கிறது மத்திய பாஸ்போர்ட் நிறுவனம்..!
பட்டதாரிகளுக்கு உதவி மேலாளர் வேலைக்கு விண்ணப்பிக்கலாம்!
ரூ.1.40 லட்சம் சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை.! யாருக்குத் தெரியுமா?
வருமான வரித்துறையில் வேலை: யார் யார் விண்ணப்பிக்கலாம்?