சனிக்கிழமை 23 பிப்ரவரி 2019

பொறியியல் பட்டதாரிகளுக்கு ரூ.1,80,000 சம்பளத்தில் வேலை வேண்டுமா? அழைக்கிறது பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம்..! 

By ஆர்.வெங்கடேசன்| Published: 20th January 2019 06:40 PM


மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனமான பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள துணை மேலாளர் மற்றும் மூத்த பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படவுள்ள இந்த பணியிடங்களுக்கு பொறியியல் துறை பட்டதாரிகள் விண்ணப்பித்து பயன்பெறலாம். 

மொத்த காலியிடங்கள்: 12 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: துணை மேலாளர் (Deputy Manager/ E-IV) -  02 
சம்பளம்: மாதம் ரூ.60,000 - 1,80,000

பணி: மூத்த பொறியாளர் (Senior Engineer/ E-III) -  10 
சம்பளம்: மாதம் ரூ.50,000 - 1,60,000

தகுதி: பொறியியல் துறையில் Electronics / Electronics & Communication / Electronics & Telecommunication/ Telecommunication பிரிவுகளில் முதல் வகுப்பில் பிஇ, பி.டெக் அல்லது Communication systems / Information Technology போன்ற பிரிவுகளில் முதல் வகுப்பில் எம்.டெக் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

வயதுவரம்பு: துணை மேலாளர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 36 வயதிற்குள்ளும், மூத்த பொறியாளர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 32 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்கள் ரூ. 500 கட்டணமாக செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் http://bel-india.in/ என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதுடன் தேவையான சான்றிதழ் நகல்களில் சுய சான்று செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Deputy Manager (HR/T&BS/HLS&SCB), Bharat Electronics Ltd, Jalahalli post, Bengaluru - 560013.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.bel-india.in/Documentviews.aspx?fileName=detailed-advertisement-8119.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.01.2019 

 

Tags : Bharat Electronics Ltd bel Jobs Employment velai

More from the section

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்ககத்தில் வேலை வேண்டுமா? 
இளைஞர்களே... ரயில்வேயில் 1,30,000 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு: வாய்ப்பை மிஸ்பண்ணிடாதீங்க..!
விண்ணப்பித்துவிட்டீர்களா..? உணவு தரநிர்ணய கழகத்தில் வேலை..!
ரூ.37 ஆயிரம் சம்பளத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை!
உயர்நீதிமன்றத்தில் கொட்டிக்கிடக்கும் சிஸ்டம் அதிகாரி வேலை: அரிய வாய்ப்பை மிஸ்பண்ணிடாதீங்க..!