வெள்ளிக்கிழமை 22 பிப்ரவரி 2019

ரூ. 2 லட்சத்து 24 ஆயிரம் சம்பளத்தில் வேலை வேண்டுமா..? 

Published: 22nd January 2019 02:55 PM


தேசிய பால் மேம்பாட்டு வாரியத்தில் நிரப்பப்பட உள்ள நிர்வாக இயக்குநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விவசாயம் மற்றும் அறிவியல் துறையில் பட்டமும், அனுபவமும் பெற்றவர்கள் இந்த அரிய வாய்ப்பை பெற்று பயனடையலாம்.

நிறுவனம்: National Dairy Development Board (NDDB) 

பணி: நிர்வாக இயக்குனர்

தகுதி: Agriculture, Veterinary Science, Basic Sciences, Humanities, Economics, Commerce அல்லது Engineering அல்லது சம்மந்தப்பட்ட பிரிவுகளில் முதுகலை பட்டம் பெற்று குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

பணியிடம்: தேசிய பால் மேம்பாட்டு வாரியம், ஆனந்த் - 388 001, குஜராத்.

சம்பளம்: மாதம் ரூ. 2,05,400 - ரூ.2,24,400 + இதர சலுகைகள் 

வயதுவரம்பு: 2018 டிசம்பர் 31ன்படி 55 வயதிற்குள் இருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களை பற்றிய முழு விவரங்களையும் recruit_md@nddb.coop என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 11.02.2019

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.nddb.coop அல்லது http://careers.nddb.coop/SitePages/JobSeekerJobDetail.aspx?hash=sR4coaTT9xhbGEpo0H1kH704PIqZpCWlDYOAPxJNFLQ%3D என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

More from the section

விண்ணப்பித்துவிட்டீர்களா..? உணவு தரநிர்ணய கழகத்தில் வேலை..!
ரூ.37 ஆயிரம் சம்பளத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை!
உயர்நீதிமன்றத்தில் கொட்டிக்கிடக்கும் சிஸ்டம் அதிகாரி வேலை: அரிய வாய்ப்பை மிஸ்பண்ணிடாதீங்க..!
பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா? பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு..!
10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரிய வாய்ப்பு... ஓவர்மேன், சர்வேயர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்!