சனிக்கிழமை 20 ஜூலை 2019

ரூ.9,36,020 சம்பளத்தில் வங்கி பணியாளர் தேர்வாணையத்தில் வேலை வேண்டுமா? 

Published: 08th July 2019 03:12 PM


வங்கி பணியாளர் தேர்வாணையத்தில் (ஐபிபீஎஸ்) நிரப்பப்பட உள்ள Analyst Programmer பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Analyst Programmer (Linux), Analyst Programmmer (Windows)
காலியிடங்கள்: 03
சம்பளம்: மாதம் ரூ.7,56,440
வயதுவரம்பு: 21 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். 
தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பிஇ அல்லது பி.டெக் அல்லது எம்சிஏ முடித்து 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிக்க வேண்டும்.

பணி: Research Associate
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.9,36,020
வயதுவரம்பு: 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: Psychology, Education, Management பாடப்பிரிவில் முதுகலை பட்டம் பெற்று ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

தேர்வு நடைபெறும் தேதி: 2019 ஆகஸ்ட்

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: www.ibps.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.07.2019

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.ibps.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

More from the section

இலவச உயர்தொழில் நுட்பக் கல்வி! இணையம் வாயிலாக பயன் பெறுங்கள்!
தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியத்தில் வேலை
வங்கியில் வேலை வேண்டுமா? அழைக்கிறது பாங்க் ஆஃப் பரோடா
தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனத்தில் வேலை வேண்டுமா?
விண்ணப்பித்துவிட்டீர்களா..? செயில் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் டெக்னீசியன் பணி