சனிக்கிழமை 20 ஜூலை 2019

வேலை... வேலை... வேலை... ஐடிபிஐ வங்கியில் உதவி மேலாளர் வேலை

Published: 24th June 2019 01:17 PM


இந்திய தொழில் வளர்ச்சி வங்கியான ஐடிபிஐ வங்கியில் நிரப்பப்பட உள்ள 600 உதவி மேலாளர் கிரேடு 'ஏ' பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான இளைஞர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 600

பணி: Assistant Manager Grade ‘A’

தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.23,700

வயதுவரம்பு: 01.06.2019 தேதியின்படி குறைந்தபட்சம் 21 முதல் 28 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். 

தேர்வுக்கட்டணம்: எஸ்சி,எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.150. மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.200 கட்டணமாக செலுத்த வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: www.idbi.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.idbibank.in/pdf/careers/Detailed-Advertisment-MGES-2019-20.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 03.07.2019

More from the section

இலவச உயர்தொழில் நுட்பக் கல்வி! இணையம் வாயிலாக பயன் பெறுங்கள்!
தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியத்தில் வேலை
வங்கியில் வேலை வேண்டுமா? அழைக்கிறது பாங்க் ஆஃப் பரோடா
தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனத்தில் வேலை வேண்டுமா?
விண்ணப்பித்துவிட்டீர்களா..? செயில் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் டெக்னீசியன் பணி