திங்கள்கிழமை 21 ஜனவரி 2019

திருப்பதியில் மகா கும்பாபிஷேகம்

DIN | Published: 17th August 2018 04:05 PM

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆகம விதிகளின்படி நடத்தப்படும் கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் வரும் 11-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்றது. இந்நிலையில் 16-ஆம் தேதி முக்கிய நிகழ்வான கும்பாபிஷேகத்தையொட்டி காலை 10.16 மணி முதல் பகல் 12 மணிக்கு இடையே யாக சாலையில் வைக்கப்பட்டிருந்த கலசம், மேளதாளம் முழங்க எடுத்து செல்லப்பட்டு வேத பண்டிதர்கள், அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்க, மூலவர் கருவறைக்கு மேல் உள்ள ஆனந்த நிலையம், ராஜகோபுரம் மற்றும் இதர சன்னதிகளுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பக்தர்கள் 'கோவிந்தா, கோவிந்தா' என பக்தி முழக்கமிட்டு தரிசனம் செய்தனர். பிறகு மகா தீபாராதனை நடைபெற்றது.

Tags : Tirumala Mahasamproshanam கும்பாபிஷேகம் திருப்பதி கோவிந்தா பக்தி மகா தீபாராதனை வேத மந்திரங்கள் ஆனந்த நிலையம் ராஜகோபுரம் புனிதநீர்

More from the section

அனுமன் ஜெயந்தி விழா
துக்காச்சி சதுர்வேதி மங்கலம்
வைகுண்ட ஏகாதசி விழா
பார்த்தசாரதி கோயில் சொர்க்க வாசல் திறப்பு
பிரம்மோத்ஸவ விழா