வெள்ளிக்கிழமை 22 மார்ச் 2019

அருள்மிகு மல்லிகார்ஜீனசுவாமி கரைகண்டீஸ்வரர் - பருவதமலை 

DIN | Published: 22nd February 2019 12:00 PM

'ஒருமுறை பருவதமலைக்குச் சென்று வந்தால் பூமியிலுள்ள எல்லா சிவாலயத்திற்கும் சென்று வந்ததற்குச் சமம்' என்று கூறப்படும் ஸ்ரீ பருவதமலையில் அமைந்துள்ள அருள்மிகு பிரம்மராம்பிகை சமேத மல்லிகார்ஜீன சுவாமி கோவில். அடிக்கொரு லிங்கம் அருணாச்சலம், பிடிக்கொரு லிங்கம் பருவத மலை என்று சொல்லுவார்கள். இதில் உள்ள சிறப்புகள். 1. ஈஸ்வரன் இமயத்திலிருந்து தென்பகுதி தமிழகத்திற்கு வந்த போது முதன் முதலாக காலடி வைத்த மலை. 2. ஆஞ்சநேயர் இமயத்திலிருந்து சஞ்சீவி மலையை தென் பகுதிக்கு தூக்கி வந்த போது விழுந்த ஒரு துளி தான் இந்த மலை. 3. ஏழு சடைப்பிரிவுகளை கொண்ட மலை. 4. மூலிகை காற்று எப்போதும் வீசி தீராத நோய் தீர்க்கும் மலை. 5. 4500 அடி உயரமுள்ள செங்குத்தான கடப்பாறைப் படி, தண்டவாள படி, ஏணிப் படி கொண்ட உலகில் உள்ள அதிசய மலை. 6. சித்தர்கள் வாழும் மலை. பல அடியார் பெருமக்களுக்கு சித்தர்கள் காட்சி கொடுத்துள்ளார்கள். மலையில் உள்ள நூற்றுக்கணக்கான குகைகளில் சித்தர்கள் இன்றும் வாழ்ந்து வருகின்றார்கள். 7. இரவிலே ஜோதி தரிசனம் காணும் மலை. சிவன் கருவறையிலிருந்து கோயிலை சுற்றி, மலர்களின் வாசனையை நுகரலாம். 8. அம்மன் அழகு வேறெங்கும் காண முடியாத பேரழகு. இரவில் அம்மன் கன்னத்தில் ஜோதி ஒளி காணலாம். 9. அம்மன் கருவறையிலிருந்து வெளியே செல்ல செல்ல தூரம் அதிகரிக்க அதிகரிக்க, அம்மன் உயரமாக காட்சி தந்து நேரில் வருவது போல் இருக்கும். இந்த அருள் நிலை காண கண் கோடி வேண்டும். 10. சிவபெருமான் எதிரே கற்பூரம் ஏற்றி வெளியே நின்று கற்பூர ஜோதியை நோக்கினால் நாகம், சூலம், உடுக்கை பிம்பம் காணலாம். படங்கள் உதவி: ராகேஸ் TUT - 7904612352

Tags : பருவதமலை சுவாமி கரைகண்டீஸ்வரர் அருள்மிகு மல்லிகார்ஜின சுவாமி கரைகண்டீஸ்வரர்

More from the section

வேலும் மயிலும் சேவலும் துணை - வள்ளிமலை
மகா சிவராத்திரி விழா
காட்டுமன்னார்கோயில் வட்டத்தில் உள்ள சிவாலயங்கள்
திருவிடைமருதூர் வட்டத்தில் உள்ள சிவாலயங்கள்
மகாமக தீர்த்தவாரி விழா