சனிக்கிழமை 20 ஜூலை 2019

இராஜபதி கைலாசநாதர் ஆலய இராஜகோபுர மகாகும்பாபிஷேகம்

DIN | Published: 16th June 2019 11:08 PM

நவம் என்றால் ஒன்பது. நவகைலாயம் என்றால், ஒன்பது கிரகங்கள் மூலம் அமையப்பெற்ற ஒன்பது சிவாலயங்கள். இது கிரக ஆலயமல்ல, நவக்கிரக சிவாலயம். இராஜபதி கைலாசநாதரை, கேது வந்து வணங்கினான். இராஜபதிக்கு வந்து செளந்தர்யநாயகி சமேத கைலாசநாதரை வணங்கினால் கேதுவின் தாக்கம் குறையும். இதுபோலதான், ஒவ்வொரு கிரகத் தாக்கத்தையும் ஒழிக்க வல்லதான அமைந்தது இந்த நவகைலாய ஆலயம். தோஷங்களை விலக்கி வைக்கும் அதிகாரம் சிலவானதை, சிவபெருமான் நவக்கிரங்கங்களுக்கு அளித்து அருளச் செய்ய பணித்துள்ளார். இந்த நவகைலாயத் திருத்தலம் ஒன்பதில் எட்டு தாமிரபரணி நதிக்கரையோரமாவும், இராஜபதி ஆலயத் தலம் ஒன்று மட்டும் நதியின் மிக அருகேயே அமையப் பெற்றன. ஜூன் மாதம் 14-ஆம் தேதி இவ் ஆலயத்தின் ஏழுநிலை இராஜகோபுரத்திற்கு மகாகும்பாபிஷேம் நடைபெற்றது. படங்கள் உதவி: கோவை. கு. கருப்பசாமி - 9994643516

Tags : சிவபெருமான் தாமிரபரணி மகாகும்பாபிஷேகம் இராஜபதி கைலாசநாதர் ஆலயம் ஸ்ரீ செளந்தர்யநாயகி சமேத கைலாசநாதர்

More from the section

கோலாகலமாக துவங்கியது ஸ்ரீ அத்தி வரதர் தரிசனம்
மதங்கீஸ்வரப் பெருமான் ஆலயம் திருவிழா
வறண்டுபோகும்  நிலையில் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவில் தெப்பக்குளம்
15 பெருமாள்கள் நவநீத சேவை
கும்பகோணத்தில் பன்னிரெண்டு  கருடசேவை