சனிக்கிழமை 19 ஜனவரி 2019

தினமணி இணையதளம் நடத்திய சென்னையின் சமையல் ராணி  

DIN | Published: 04th September 2018 10:44 PM

தினமணி இணையதளம் சார்பில், சென்னையின் சமையல் ராணி - 2018 என்ற மாபெரும் சமையல் போட்டி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எம்.ஓ.பி.வைஷ்ணவ் பெண்கள் கல்லூரியில் நடைபெற்றது. இப்போட்டியில், சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளைச் சேர்ந்த 18 முதல் 50 வயது வரையுள்ள பெண்கள் கலந்துகொண்டனர். போட்டியை கல்லூரி முதல்வர் லலிதா பாலகிருஷ்ணன் தொடங்கிவைத்தார்.  இதில் முதல் பரிசாக தினமணி இணையதளம் சார்பில் ரூ.5000, சான்றிதழ், வெற்றிக்கேடயம் மற்றும் பரிசுக் கூப்பன்கள் வழங்கப்பட்டன. இரண்டாவது இடம் பெற்றவர்களுக்கு ரூ.3000, சான்றிதழ், வெற்றிக்கேடயம் மற்றும் பரிசுக் கூப்பன்களும், மூன்றாவது இடம் பெற்றவர்களுக்கு ரூ.2500, சான்றிதழ், வெற்றிக்கேடயம் மற்றும் பரிசுக் கூப்பன்களும் வழங்கப்பட்டன. இவை தவிர, போட்டியில் கலந்துகொண்டவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

Tags : Cooking Competition சமையல் ராணி தினமணி இணையதளம்

More from the section

காஷ்மீரில் கடும் பனிப்பொழி
தொடங்கியது தமிழக சட்டப்பேரவை கூட்டம்
வாஜ்பாய் நினைவாக 100 ரூபாய் நாணயம் வெளியீடு
மகாகவி பாரதியாரின் 137-ஆவது பிறந்தநாள் விழா
சங்கரின் மனைவி கவுசல்யா மறுமணம்