24 பிப்ரவரி 2019

தி.மு.க. தலைவராக ஸ்டாலின் தேர்வு

DIN | Published: 28th August 2018 08:21 PM

திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு, சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்ற கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார். இதனையடுத்து அங்கு வைக்கப்பட்டிருந்த பேரறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் திருவுருவப்படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பிறகு மு.க.ஸ்டாலினுக்கு, பேராசிரியர் அன்பழகன் சால்வை அணித்து வாழ்த்துத் தெரிவித்தார். தொடர்ந்து, தி.மு.க. பொருளாளராக துரைமுருகன் ஒருமனதாக போட்டியின்றி தேர்வுசெய்யப்பட்டதாக க.அன்பழகன் அறிவித்தார். பொதுக்குழுவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை வரவேற்று மூத்த நிர்வாகிகள் வாழ்த்துரைகளை வழங்கினர்.

Tags : ஸ்டாலின் தி.மு.க. தலைவர் DMK leader

More from the section

காங்கிரஸ் - திமுக கூட்டணி உடன்பாடு
விஜயகாந்துடன் பியூஷ் கோயல் சந்திப்பு
பாமக - அதிமுக கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது
கீழடி ஊராட்சி சபை கூட்டத்தில் ஸ்டாலின்
70வது குடியரசு தின விழா கொண்டாட்டம்