வெள்ளிக்கிழமை 22 மார்ச் 2019

காந்தி எனும் எளிய மனிதரின் அழகியல் மிகுந்த வாழ்வியல் தரிசனப் புகைப்படங்கள்!

By பரணி| DIN | Published: 02nd October 2018 12:51 PM

 

மகாத்மாவை நமக்கெல்லாம் தேசப்பிதாவாகத் தெரியும். அவரது பெருமைகளைப்போற்றும் அதே வேளையில் அவர் எப்படி பல கோடிக்கணக்கான மனிதர்களுக்கு வாழ்வியல் வழிகாட்டியாக எளிய வாழ்க்கை முறையை தமக்குத் தாமே வடிவமைத்துக் கொண்டு பார்ப்போர் வியக்கும் வண்ணம் வாழ்ந்தார் என்பதையும் நாம் காந்தி ஜெயந்தி கொண்டாடும் இவ்வேளையிலாவது தெரிந்து கொள்ள வேண்டும். காந்தியின் புகைப்படங்களைக் காண்போருக்கு ஒரு விஷயம் மிக எளிதாகப் புலப்படலாம். அவர் மிக மிக எளிய மனிதர். அவர் வாழ்ந்த வாழ்க்கை மட்டுமல்ல அவர் பிறரை அணுகிய விதமும் கூட மிக மிக எளிமையான மானுட நேசத்திற்கு உட்பட்டதாகவே இருந்தது.

கீழுள்ள புகைப்படங்களைக் காணுங்கள்... அவரது வாழ்வியல் தரிசனங்கள் எத்தனை அழுத்தமாக எளிமையைப் போதிக்கிறது என்பது தெரிய வரும்.

தொழுநோயால் பாதிக்கப்பட்ட பரச்சூர் சாஸ்திரி என்பவரை சேவாகிராம் ஆசிரமத்தில் சந்திக்கும் காந்தி அவருக்கு சேவை புரிவதற்காகக் குனியும் காட்சி...

சேவாகிராம் ஆசிரமத்தில் சுகாதாரப் பணிகளை மேற்கொள்ள வேஷ்டியை வரிந்து கட்டிக் கொண்டு தானே களமிறங்கத் தயாராகும் மகாத்மாவின் புகைப்படம்...

 

 

இரண்டாம் வட்டமேஜை மாநாட்டில் கலந்து கொள்ள அரையாடையுடன் புறப்பட்ட அற்புத மனிதர்.

மனிதனின் அந்தஸ்து உடைகளை வைத்து அல்ல அவனது நல்லியல்பைக் கொண்டே என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர் காந்தி.

மகாகவி ரவீந்திர நாத் தாஹூருடன் காந்தி...

 

எங்கு செல்வதாக இருந்தாலும் பெரும்பாலும் நடைபயணத்தையே விரும்பும் காந்தி...

நவகாளி யாத்திரை மேற்கொள்கையில் ஃப்ரண்டியர் காந்தி என்று அழைக்கப்பட்ட கான் அப்துல் கபார் கானுடன் வன்முறைகளைக் காண வருத்தத்துடன் புறப்படும் காந்தி...

 

Tags : காந்தி ஸ்பெஷல் 3 காந்தியின் எளிய வாழ்வியல் தரிசனங்கள் காந்தி தரிசனம் புகைப்படங்கள் gandhi dharsan photos gandhi jayanthi special october 2nd

More from the section

அண்ணலுடன் எனது நினைவுகள்' பகிர்ந்து கொள்ளுங்கள் வாசகர்களே!
முதல் நாளே முடிவை அறிந்த காந்திஜி!
125 வயது வாழ்வேன்!
அட்டூழியங்களை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும்
காஷ்மீர் படையெடுப்புக்கு பாகிஸ்தானே பொறுப்பு